இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய பிரசன்னத்தைப் பற்றிய ஏசாயாவின் அனுபவம், இஸ்ரவேலுக்கான அவருடைய ஊழிய வாழ்க்கைக்குத் தேவையான பரிசுத்த சுத்திகரிப்பை அவருக்குக் கொண்டு வந்தது. அதுபோலவே, கர்த்தருடைய பந்தியின் போது நாம் உதடுகளில் அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிக்கும் போதும், பருகும்போதும் , இயேசுவின் பலியினாலும், பரிசுத்த ஆவியின் சுத்திகரிப்பு வல்லமையினாலும் நம்முடைய "பாவம் கழுவப்பட்டது " என்றும், நம்முடைய "பாவம் நிவர்த்தி செய்யப்பட்டது" என்றும் தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார். நம்மால் செய்ய முடியாததை இயேசு நமக்காகச் செய்தார்: அவர் நம்முடைய பாவங்களுக்காக பரிபூரணமான பலியை அளித்தார், உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். (1 கொரிந்தியர் 6:9-11). நம்முடைய பரிசுத்தமும், நீதியும், பரிபூரணமும் பூமியில் நாம் செய்யும் முயற்சிகளினால் அல்ல, மாறாக பரலோகத்தின் மகிமையிலிருந்து வந்து, நாம் தேவனுடைய நீதியாக இருக்கும்படி தன் ஜீவனைக் கொடுத்த குமாரனால் பெறப்படுகிறது (2 கொரிந்தியர் 5:21; பிலிப்பியர் 2:5-11 )
என்னுடைய ஜெபம்
விலையேறப்பெற்ற மற்றும் அன்பு நிறைந்த பிதாவே , என் பாவங்களுக்கான உமது பரிபூரண தியாகத்திற்காக உமக்கு நன்றி. உம்முடைய எண்ணி முடியாத ஈவைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த என்னைப் பயன்படுத்துங்கள். என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவின் நாமத்தில் உமக்கு எல்லா மகிமையும், கனமும், ஸ்தோத்திரமும், துதியும் உண்டாவதாக. ஆமென்.