இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் உலகில் தனது சிருஷ்டிப்புகளை 6 நாட்களில் செய்து முடித்தார். அவர் தமது வல்லமைமையுள்ள வார்த்தையினால் அதை நிலைநிறுத்துகிறார். அவருடைய மகிமைக்காக கிறிஸ்து நம்மை மறுபடியுமாய் வந்து நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவருடைய சித்தத்தை தொடர்ந்து நம்மேலும் நமக்குள்ளும் கிரியை நடப்பித்துக்கொண்டே இருக்கிறார்! (பிலிப்பியர் 2:12-13 ஐப் பார்க்கவும்)
என்னுடைய ஜெபம்
என் வாழ்க்கையில் கிரியை நடப்பித்ததற்காக உமக்கு நன்றி தகப்பனே . சில சமயங்களில் நீர் தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை திரும்பிப் பார்க்கும்போது, உம்முடைய கைகளின் கிரியையையும் , உம் கிருபையையும் இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். அன்பான பிதாவே , நான் உமது விருப்பத்தை நாடி, உமது மகிமைக்காக வாழ அர்ப்பணிப்புடன் இருக்கையில், உமது பிரசன்னத்தை என் வாழ்வில் இன்னும் பெலமுள்ளதாய் தெரியப்படுத்துங்கள். என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.