இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சபையிலே தொழுதுக்கொள்வது மாத்திரம் பூமியில் நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல. மிக முக்கியமான ஒன்றாக சேர்ந்து பொதுவாக ஜெபிப்பது மற்றும் தனிப்பட்ட முறையில் தேவனை துதிப்பது ஆகியவை நமது தொழுகைக்கான நமது இலக்கின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . நம் உதடுகளினால் , ஜீவியத்தினால் , இருதயத்தினால் மற்றும் நம்முடைய கரங்களினால் தேவனை மகிமைப்படுத்த பூமியில் அதற்காகவே நாம் இருக்கிறோம் . நம்மைச் சுற்றியுள்ள உலகம் சாத்தானின் வலையில் சிக்கியுள்ள நிலையில், சபையின் தனிப்பட்ட தொழுகையிலும் நாம் அவருடைய அழைப்பைக் கேட்டு, "இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் !" என்று அவருக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (ரோமர் 12:1-2; எபிரேயர் 12:28-13:16).
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , நான் பெற்ற அனுபவங்களை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. என் தாயின் வயிற்றில் நீர் என்னை உருவாக்கின போது நீர் எனக்குள் வைத்த திறமைகளுக்காக உமக்கு நன்றி (சங்கீதம் 139:13-16). நான் உம் பிள்ளையாக மாறியபோது உமது ஆவியை எனக்குள் ஊற்றிய ஈவுக்காக நன்றி. இப்போதும் , அன்பான பிதாவே , இந்த ஈவுகள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை உமது ராஜ்யத்திற்காகப் பயன்படுத்தவும், என்னைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்கவும் எனக்கு உதவியருளும் . மற்றவர்களை உம்மிடம் அழைத்து வரவும், கிறிஸ்துவின் சரீரத்தைக் (சபையை) கட்டியெழுப்பவும், தேவைப்படுபவர்களை ஆசீர்வதிக்க எனது ஈவுகளையும் திறமைகளையும் அவைகளுக்காக பயன்படுத்த விரும்புகிறேன். இவை அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் அதிகாரத்தினாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.