இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகளைப் பற்றி அவருடன் நேர்மையாகப் பேச முடியாதபடி, சில சமயங்களில், தேவன் மிகவும் நொறுங்குண்டவர் , தொலைதூரமானவர், அல்லது விரக்தியடையாதவர் என்று நாம் நினைக்கிறோம். மற்றவர்கள் ஒருபோதும் தேவனை சந்தேகிக்கவோ, கோபமாக்கவோ அல்லது ஏமாற்றமடைய செய்யவோ விரும்புவதில்லை , ஏனென்றால் அது இழிவான செயலாக தோன்றலாம் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், யோபு எதை குறித்தும் வெட்கப்படவில்லை. தேவன் மீதான தனது மனவேதனை, வலி ​​மற்றும் ஏமாற்றத்தைப் பற்றி அவர் எப்பொழுதும் மறைத்தும், மறுத்தும் வாழவில்லை. அவர் தனது மாபெரிதான தேவனுக்கு முன்பாக கனத்துக்குரிய மற்றும் பயபக்திக்குரிய வாழ்க்கையிலிருந்து நேர்மையாக பேசினார் (யோபு 1:1). புயலின் மத்தியில் இருந்தாலும், நாம் சோர்வாகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்தாலும், அவருடன் நம் உறவைப் எப்பொழுதும் பேண வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார் என்பதை யோபு நமக்கு நினைப்பூட்டுகிறார். உங்கள் போராட்டங்களில் நீங்கள் எங்கிருந்தாலும், பரலோகத்தின் தேவனிடம் நேர்மையாக இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி அவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையின் தற்போதைய அத்தியாயத்தைப் பற்றி உண்மையாக இருங்கள், வலியும் ஏமாற்றமும் உங்களை மூழ்கடிக்கும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் உண்மையான காயங்கள், ஆழ்ந்த விரக்திகள் மற்றும் மிகப்பெரிய அச்சங்களுக்கு அவர் உதவி செய்யட்டும். சங்கீதக்காரன் தேவனுக்கு நேர்மையான புகார் மற்றும் குழப்பத்தின் பல வார்த்தைகளை கூறுகிறான் . யோபு தனது துன்பம் மற்றும் வாழ்க்கையின் அநியாயத்தைப் பற்றி நேர்மையானவர். எனவே, நீங்களும் தேவனிடம் எப்பொழுதும் நேர்மையாக இருக்க முடியும். உங்கள் இருதயத்திற்கு உண்மைக்கு புறம்பான, அற்பமான, அழகான மற்றும் கிளுகிளுப்பான வார்த்தைகளைப் பயன்படுத்த நீங்கள் மறுக்கலாம். பரிசுத்த ஆவியானவர் உங்கள் வார்த்தைகளைச் சுத்தப்படுத்தவும், உங்கள் இருதயத்தின் சொல்லமுடியாத உணர்ச்சிகளைப் பேசவும் உதவுகிறார் (ரோமர் 8:26-27). நீங்கள் மௌனமாய் இருக்காதீர்கள் ; உங்கள் ஆவியின் வேதனையையும், உங்கள் ஆத்துமாவின் கசப்பையும் உங்கள் பிதாவாகிய தேவனிடத்தில் கூறுங்கள் , அவர் உங்களுடைய சத்தத்தை கேட்டு நீங்கள் படும் கஷ்டத்தை கண்டு விசாரிக்கிறார் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என் வார்த்தைகளையும் என் இருதயத்தின் வியாகுலத்தையும் கேட்டதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியையும் என் இரட்சகராகிய இயேசுவையும் உமது சிங்காசனத்திற்கு முன்பாக என் பரிந்துரையாளர்களாக கொடுத்ததற்காக நன்றி. என் இருதயம் குழப்பத்தினால் , கோபத்தினால் மற்றும் வலியினால் நிறைந்திருந்தாலும் , உம்முடைய சமூகத்தில் என்னை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. அடியேனுடைய இருதயம் நொறுங்கி மற்றும் போராட்டங்களினால் இருந்த வேளைகளில் என்னை நேசித்ததற்காக நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வேதனையான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்பதாகவும் , இன்னுமாய் உம்முடைய மகிமையில் பங்குகொள்ள உம் நித்திய வீட்டிற்கு அழைத்து செல்லப்போவதாக நீர் அளித்த வாக்குறுதிக்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து