இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில விஷயங்களுக்கு நிறைய விளக்கங்கள் தேவையில்லை, இன்னும் அநேக காரியங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். என்னுடனே சேர்ந்து வாழ நான் உங்களை அழைக்கிறேன்: எந்த சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுடன் நம்மைக் காண்கிறோம் என்ற பொன் மொழியின் படி வாழ உறுதிக் கொள்வோம்!
என்னுடைய ஜெபம்
அன்பான பரலோகத்தின் தேவனே, சர்வவல்லமையுள்ள பிதாவே , அடியேன் கொண்டுள்ள சுயநலத்திற்காகவும்,அது அநேக வேளை தன் தலை தூக்கி பார்க்கிறது அதற்காக ஒருவிசை மன்னித்தருளும் . இயேசுவின் மூலமாய் நீர் என்னை மிகவும் வளமாகவும் கிருபையாகவும் ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி . மற்றவர்கள் என்னுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அதுப் போல, அடியேனும் மற்றவர்களுடன் தாராளமாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும், கனிவாகவும் இருக்கும்படி உம் பரிசுத்த ஆவியினால் என்னைத் பெலப்படுத்தும் . மற்றவர்களுடனான எனது உறவுகளில் நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இயேசுவின் அந்த பொன்னான வார்த்தையின் கொள்கைகளைப் பயன்படுத்த முயலும்போது எனக்கு உதவிச்செய்யும் . கர்த்தராகிய இயேசு என்னிடம் இருந்தது போல அடியேனும் மற்றவர்களிடம் அன்பாகவும் கிருபையாகவும் இருக்கவும், நான் எப்படி நடத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறேனோ அவ்வண்ணமே அடியேனும் அவர்களை நடத்தவும் விரும்புகிறேன். இயேசுவின் இந்த மெய்யான சத்தியத்தை என் அனுதின வாழ்வில் நடப்பிக்க விரும்புகிறேன். இவை அனைத்தையும் இயேசுவின் நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறேன்.ஆமென்.