இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் உயர்த்தப்படும்போதும் , ​​அவருடைய நாமம் போற்றப்படும்போதும் , ​​அவருடைய மகிமையை அறிக்கையிடும்போதும் , ​​தேவனுக்கு மகிமைமையும், மாட்சிமையும், கனமும் உண்டாகிறது . நாசரேத்தின் இயேசுவானவர் , நம்முடைய சிறந்த மேசியாவாகிய கிறிஸ்து, இரட்சகர், தேவனுடைய குமாரன், மற்றும் ஜெய ராஜா அந்த மகிமையான நாமத்திற்கே துதியும், போற்றுதலும் உண்டாகக்கடவது !

என்னுடைய ஜெபம்

விலையேறப் பெற்ற இரட்சகரே, இயேசு கிறிஸ்து என் ஆண்டவர் , உமது நாமம் அற்புதமானது! என் பாவத்திற்காக உம்முடைய தியாகம் மிகவும் அன்பாகவும் உதாரத்துவமாகவும் இருந்தது. எங்கள் பரம பிதா உம்மை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், உம் மூலமாக நான் தேவனுடன் இருந்து நித்தியமாக அவரை போற்றி துதித்து தொழுதுக்கொள்ள முடியும்! நீர் மகிமையுள்ளவர், என் ஆண்டவராகிய இயேசுவே! உமது மகிமையான நாமத்தினாலே நான் தேவனுக்கு இந்த துதியை செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து