இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இளமையாக இருப்பதினால் ஒரு ஆர்வமும், உற்சாகமும் , தெளிவான நோக்கமும் உள்ளது - வயதில் முதிந்தவர்கள் இவைகளை தலைக்கனம் என்றும் , சோதிக்கப்படாதவர்கள் மற்றும் விரைவாக பதில் செய்கிறவர்கள் என்று விவரிக்கலாம். காலப்போக்கில் நிரூபிக்கப்பட்ட முயற்சித்த மற்றும் உண்மையான முறைகளின் காரணமாக வயதுக்கு ஒரு உத்தரவாதம் உள்ளது - இவைகள் நிலையானது , யூகிக்கக்கூடிய மற்றும் அசைக்க முடியாதது என்று இளையவர்கள் இப்படி விவரிக்கலாம். இந்த வேறுபாடுகள் பதற்றம் மற்றும் மோதலை ஏற்படுத்தலாம், இருப்பினும் இரு வயதினரும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் உண்டு . ஒரு முதிர் வயதான கிறிஸ்தவர் தவறுகள் செய்திருந்தாலும், அவர்களிடம் விசுவாசத்தின் நிரூபிக்கப்பட்ட நல்நடக்கை இருப்பதினால் , அவர்கள் அதிக கனத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால் முதிர்வயதான கிறிஸ்தவர்களும் இளையவரிடமிருந்து திருத்தம் பெற தயாராக இருக்க வேண்டும், குறிப்பாக வயதானவர்களிடம் மனத்தாழ்மை, அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்திய ஒரு இளம் விசுவாசி ஜெபத்துடன் இவைகளை செய்தால். மிக முக்கியமாக, வயதைப் பொருட்படுத்தாமல் இயேசுவுக்காக உணர்ச்சியுடன் வாழ நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்!
என்னுடைய ஜெபம்
நித்திய பிதாவே, என் முற்பிதாக்களின் , என் எதிர்காலத்தின் தேவனே , தயவுக்கூர்ந்து ஒரு உண்மையுள்ள நபராக இருக்க எனக்கு உதவுங்கள், குறிப்பாக என் வயதுக்குட்பட்டவர்களுடன் பழகும்போதும், நான் முதிர் வயதுள்ளவர்களுடன் பேசும்போதும் மரியாதையுடனும் கவனமாகவும் இருக்க முயலும் போதும் தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இளையவர்கள் என் தவறுகளை சுட்டிக்காட்டும்போது , அவைகளை ஏற்றுக்கொண்டு தன்மையுடனும், எப்பொழுதும் மாறுவதற்குத் தயாராகவும் இருக்க எனக்கு உதவுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , அடியேனை செவ்வைப்படுத்த , என் பிழைகளை உணர்த்தி அதை மன்னித்து , மென்மேலும் வளரும்படி என்னை நேசிக்கும் நபர்களை என் வாழ்க்கையின் பயணத்தில் எனக்கு தாரும். நான் இயேசுவைப் போல இன்னும் மாறுவதற்கு எனக்கு உதவியருளும். அவர் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.