இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேசங்களுக்காக , அரசாங்கங்களுக்காக , இன்னுமாய் தலைவர்களின் மனந்திரும்பதளின் காரியங்களுக்காக குறித்து விவாதிக்கும் போது இந்நாட்களில் வாழ்கிற அக்கறையுள்ள மக்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதன் முழுமையான தேவை என்னவென்றால் மாம்ச பிரகாரமான இஸ்ரவேளிலும் , நம்மிலும், நம் சபைகளிலும் "இஸ்ரவேலின் தேவன் " (கலாத்தியர் 3:26-29; 6:16; ரோமர் 9:6-9) ஒருவர் உண்டு என்றும் அவருடைய வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்வோம். கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். துன்மார்க்கத்தை விட்டு விலகி தேவனுடைய மன்னிப்பை நாடும்போது, ​​நம் உலகில் தேவனின் பிரசன்னத்தை நாடி, அனுதினமும் ஜெபத்தில் பணிவுடன் ஈடுபட்டால், நமது தேசத்திலும் , சபைகளிலும் , குழுக்களிலும் எழுப்புதலை உண்டாக்கலாம் .

என்னுடைய ஜெபம்

தேவனே , எல்லா தேசங்களுக்கும் மற்றும் எல்லா மக்களின் பிதாவே , உமது வல்லமை மற்றும் கிருபையின் தெளிவான அடையாளங்களுடன் எங்கள் உலகில் வாரும் . இயேசுவின் திருவுளத்தின் கீழ் நாங்கள் வாழ முற்படும்போது எங்களையும் நம் வாழ்க்கையையும் மாற்றுங்கள்! காணாமற்போன ஜனங்களை எங்கள் மூலம் உம்மிடத்தில் அழைப்பியும் . உம் மக்கள் மற்றும் உம் கிருபை மூலம் எங்கள் தேசத்தையும் எங்கள் உலகத்தையும் குணப்படுத்தத் துவங்கும் போது புதுப்பித்தல் மற்றும் நற்சீற்பொருந்துதல் ஆகியவற்றை கொண்டு முதற்பலனாக எங்களை பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து