இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சத்துவமற்ற மற்றும் மறக்கப்பட்ட - விதவைகள், திக்கற்ற பிள்ளைகள் மற்றும் நம்மிடையே உள்ள அந்நியர்களுக்கான செய்யப்படும் அன்பான ஆதரவு (உபாகமம் 10:18, 24:17-21; சங்கீதம் 146:9) - தேவனுடைய இருதயத்தில் வேரூன்றி இருக்கும் காரியம் மற்றும் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண சட்டத்தில் வெற்றி பெற்ற காரியங்கள் இவைகளாகும் . ஆரம்பகால சபை உண்டான காலகட்டத்தில் அவசரமாக எதிர்கொண்ட மற்றும் நேர்த்தியாக கையாளப்பட்ட முதல் உள் பிரச்சினைகளில் ஒன்று, மொழியின் அடிப்படையில் விதவைகள் மீது அவர்கள் கொண்டதான மனதின் அபிப்பிராயம் - அதாவது எருசலேமில் இருக்கும் யூத விதவைகள் ஆனால் கிரேக்க மொழி பேசுபவர்கள் (அப்போஸ்தலர் 6:1-7). அனைவருக்கும் அன்பு, ஆதரவு மற்றும் அக்கறை காட்டுவது தேவனுக்கு இன்றியமையாதது மற்றும் ஆரம்பகால சபை தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரியமாகும் . இன்று விதவைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களிடம் அதே அக்கறை இருக்க வேண்டும் என்று பவுலானவர் பின்னர் தீமோத்தேயுவுக்கும் நமக்கும் நினைப்பூட்டினார்! ( யாக்கோபு ஆசிரியர் விதவைகள் மற்றும் திக்கற்றப்பிள்ளைகள் ஆகிய இருவருக்கும் அதே அக்கறையைக் காட்டுகிறார் என்பதைக் நீங்கள் கவனியுங்கள் - யாக்கோபு 1:27)
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , என்னை மன்னியுங்கள், ஏனென்றால் நான் அநேக சமயங்களில் எனது வாய்ப்புகள் மற்றும் பிரச்சனைகளில் தொலைந்து போகிறேன், ஆகையால் நான் என் சபையாகிய குடும்பத்தில் என் உதவி தேவைப்படுகிறவர்களைச் சுற்றிப் பார்க்காமல், மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாத தேவையுள்ளவர்களை நோக்கி பார்க்கவில்லை. உம்முடைய பரிசுத்த ஆவியினால் அடியேனை தொட்டு, அவர்களின் தேவைகளைக் கேட்கவும், பார்க்கவும், பதிலளிக்கவும் எனக்கு உதவி செய்தருளும் . அனைத்து மக்கள் மீதும் உம்முடைய அக்கறையை காண்பிக்க விரும்புகிறேன் . உதவிகள் தேவைப்படுபவர்களை ஆசீர்வதிக்க உமது கிருபையயின் கருவிகளில் ஒன்றாக அடியேனை எடுத்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் கனமுள்ள நாமத்தின் மூலமாய் , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.