இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வெளிப்புறமான காட்சி , கண்களால் பார்க்க முடியும் விஷயங்களில், மாம்சமான காரியங்களில் நாம் மிகவும் அதிக கவனம்செலுத்திக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய அக்கறையின் மையத்தை இயேசு காண்பிக்கிறார் - நமது ஆவிக்குரிய இருதயத்தின் நிலையாகும் . நாம் நம் உடலின் மேல் எதை உடுத்துகிறோம் என்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், நம் இருதயத்தில் எவைகளை வளர்க்கிறோம் , மற்றும் நம் மனதில் எதை குறித்து சிந்திக்க அனுமதிக்கிறோம் என்பதையும் அவர் அறிய விரும்புகிறார். நம்மில் பெரும்பாலானோருக்கு நமது உள் உலகம்{ அதாவது ஆவிக்குரிய வாழ்க்கை } மிகுந்த கவனத்தையும், மற்றும் மறுரூபமாக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையும் பெற வேண்டும். எனவே, இந்த காரியத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம் , மற்றவர்களுக்கு நாம் எப்படி தோன்றுகிறோம் என்பதில் அக்கறை கொள்வதினால் நாம் நம்முடைய வெளிப்புற தோற்றத்திற்க்கு அதிக கவனம் செலுத்துவதைப் போல, நமது உள்ளான ஆத்தும உலகில் அதிக கவனம் செலுத்துகிறோமா என்று நம்மை நாமே கேட்போம்! சமூக ஊடகங்களின் காரியங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் உலகில், இது நாம் வாழும் காலத்தின் மிகவும் முக்கியமான ஆவிக்குரிய சவால்களில் ஒன்றாக இருக்கலாம்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே , மனதையும் இருதயத்தையும் ஆராய்கிறவரே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரியமாயிருப்பதாக. உமது பரிசுத்த ஆவியின் பரிசுத்தமான கிரியையினால் சுத்திகரிக்கவும் , மீண்டும் அலங்கரிக்கவும் எனது உள்ளான உலகத்தை உம் கரங்களில் ஒப்புவிக்கிறேன் . என் இருதயத்தை தீய லட்சியங்களிலிருந்தும், என் மனதை தூய்மையற்ற எண்ணங்களிலிருந்தும் காத்தருளும். எனது உள்ளான வாழ்க்கையும் வெளிப்புற செயல்களும் உம்மை எப்பொழுதும் மகிமைப்படுத்தவும், கனப்படுத்தவும் வேண்டுகிறேன், இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து