இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கி.பி 20 ஆம் நூற்றாண்டில் நாசரேத்தில் இயேசுவானவர் வாழ்ந்த வீட்டின் முகவரியை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் அந்த வீட்டிற்குச் சென்று, " தேவன் இங்கே வாசமாயிருக்கிறார் !" என்று சொல்லியிருப்போம். இயேசுவானவர் தேவனுடைய முழுமையாயும் மற்றும் மாம்சத்திலே முழு மனுஷனாகவும் வெளிப்பட்டார் என்ற சத்தியத்தை-அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், (பிலி. 2: 5-7) - இவைகளை முழுமையாக புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம் , இது கிருபையின் அற்புதமான சத்தியமாகும் . நாம் அவரைப் போல் இருக்க முடியாது என்பதால் தேவ குமாரன் நம்மைப் போல இருக்கம்படியாய் அடிமையின் ரூபமாக இருக்கத் தேர்ந்தெடுத்தார். நாம் அவரிடம் ஏற முடியாததால் தேவனுடைய குமாரன் நம்மிடம் இறங்கினார். இயேசுவிவின் மூலமாய் தேவன் தம்மை முழுமையாக நம்மிடம் வெளிப்படுத்தினார் , அதினால் நாம் அவருக்குள் நிறைவாக இருக்க முடியும்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , என்னால் ஆராய்ந்து முடியாத முடியாத அளவுக்கு நீர் மிக பெரியவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆயினும், நீர் எப்பொழுதும் போலவே அற்புதமும், வல்லமைமையும், மாட்சிமையும் , உடையவர் என்பதால் என் மனதால் புரிந்து கொள்ள முடியாததை விட நீர் பெரியவர் . தேவனே , உமது கிருபை என்னை வியக்க வைக்கிறது. நான் உம்மை அறிந்து கொள்ள இயேசுவை நீர் அனுப்பியதற்காக உமக்கு நன்றி. நான் மன்னிக்கப்படுவதற்கு இயேசு வானவரை இவ்உலகிற்கு அனுப்பியதற்காக நன்றி. இயேசுவை மறுபடியுமாய் அனுப்பினதினால் , நான் நித்திய வீட்டிற்குச் சென்று என்றென்றும் வாழ முடியும். உமக்கு நன்றி இயேசுவே, என்னை மீட்க வந்ததற்கும், பின்னர் மறுபடியுமாய் பிதாவினிடம் அழைத்து செல்வதற்கும் , அதனால் நான் உம் மூலம் அவருடன் சம்பாஷிக்க முடியும். உம்முடைய நாமத்தினாலும், உமது கிருபையின் நிமித்தமும், நான் எங்கள் பிதாவுக்கு முன்பாக தைரியமாக ஜெபிக்கிறேன். ஆமென்.