இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒவ்வொரு தலைமுறையும் நிலையான நம்பிக்கையைப் பெறுவதற்கு தேவனுடைய வல்லமையையும், அவருடைய மாறாத பிரசன்னத்தைப் பற்றிய அதன் சொந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த வகையான விசுவாசம், விசுவாசத்தில் தேவனுக்கான பாரம்பரியத்தைப் பெறுவதையும், தேவனுடைய கடந்தகால செயல்களைப் பற்றிய வரலாற்று சம்பவங்களை கற்றுக்கொள்வதையும் விட அவைகள் அதிகமாகும் . இரண்டு காரியங்களும் முக்கியமானவை, ஆனால் தேவனின் வல்லமையுள்ள பிரசன்னத்தினால் உண்டாகும் புதிய அனுபவம் மிகவும் அவசியம். இயேசுவானவர் மாம்சத்திலே வெளிப்பட்டார் , தேவனை அறியவும், அவர் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பதைப் பார்க்கவும் அவர் நமக்கு உதவினார் (மத்தேயு 1:23; யோவான் 3:16-17). ஆயினும் இன்றும் நாம் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய சமூகத்தையும் அனுபவிக்க வேண்டுமென்று இயேசுவானவர் இன்னும் விரும்புகிறார் (யோவான் 14:15-16, 18, 21, 23).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , உம் மீது எனக்குள்ள நம்பிக்கையையும், உம் மீது உள்ள அன்பையும் என் பிள்ளைகளுக்கும் மற்ற இளம் விசுவாசிகளுக்கும் கற்றுத்தர எனக்கு உதவியருளும் . அதற்கும் மேலாக, அப்பா பிதாவே, அவர்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்களுக்கு அன்பு செலுத்த கற்றுக்கொள்கையில், பரிசுத்த ஆவியின் மூலமாக தனிப்பட்ட முறையில் உமது வல்லமையையும் மகத்தான செயல்களையும், பிரசன்னத்தையும் அனுபவிக்க அவர்களுக்கு உதவுங்கள். இயேசுவின் வல்லமையான நாமத்தினால் நான் இதை ஜெபிக்கிறேன்! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து