இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு அழகான படம்! நமக்காக மரித்தவர் நம்மைப் போஷித்து காப்பாற்றுகிறார் . எல்லா நித்தியமும் யாரை சார்ந்திருக்கிறதோ, அவர் தனிப்பட்ட முறையில் நமக்காக நேரத்தை ஒதுக்கி நம்மை ஆறுதல்படுத்த விரும்புகிறார் . "அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். " (2 தீமோத்தேயு 1:10) பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தேவையான ஜீவத் தண்ணீராக அனுப்புகிறார் (யோவான் 7:37-39). இயேசு நம்மில் வெளிப்படுத்தப்போகும் மகிமைக்கு (ரோமர் 8:18) ஒப்பிடுகையில் தற்போதுள்ள துன்பங்களை பவுலானவர் கருதவில்லை என்று கூறுவதில் எந்த ஒரு ஆச்சரியமுமில்லை!

Thoughts on Today's Verse...

What a beautiful picture! The One who died for us will nourish and refresh us. The One upon whom all eternity hinges will take time to comfort us personally. The One who has "destroyed death and brought immortality to light" (2 Timothy 1:10) sends us the Holy Spirit as our needed living water (John 7:37-39). No wonder Paul could say that he did not consider his present sufferings worth comparing to the glory that Jesus will reveal in us! (Romans 8:18)

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவாகிய தேவனே மற்றும் சர்வ சிருஷ்டிக்கும் ஆண்டவரே, எங்கள் மீது நீர் கொண்டுள்ள உம்முடைய நம்பமுடியாத அன்பிற்காக நன்றி. உம் அளவுக்கடங்காத மற்றும் உதாரத்துவமான கிருபைக்கு நாங்கள் எவ்வளவேணும் தகுதியற்றவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆயினும் நாங்கள் அதில் மகிழ்ச்சியடைகிறோம். உம்மை மகிமைப்படுத்துவதில் எங்களின் சிறந்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை நாங்கள் அறிந்திருந்தும், உம் சமூகத்தில் எங்களை வரவேற்பதாகவும், எங்களை கவனித்துக்கொள்வதாகவும், நாங்கள் உங்களிடம் வரும்போது எங்களை ஆறுதல்படுத்துவதாகவும் நீர் உறுதியளித்ததற்காகவும் உமக்கு நன்றி. ஆண்டவரே, உமது அன்பு எங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது மற்றும் எங்கள் இருதயங்களை ஆச்சரியத்தாலும் புகழாலும் நிரப்பும் அதே வேளையில் எங்கள் பாராட்டின் வார்த்தை தனிந்துபோகிறது . இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். ஆமென்.

My Prayer...

Father God and Sovereign Lord of all Creation, thank you for your incredible love for us. While we know we don't deserve your overwhelming and generous grace, we rejoice in it. While we know our best attempts at honoring you fall short, thank you for promising to welcome us into your presence, care for us, and comfort us when we come home to you. Your love, O Lord, is beyond our comprehension and exhausts our appreciation while filling our hearts with wonder and praise. In Jesus' name, we praise you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of வெளிப்படுத்தின விசேஷம்-Revelation - 7:17

கருத்து