இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவை அறிவதைக் காட்டிலும் இன்னும் அநேக காரியங்கள் விலையேறப்பெற்றது, அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, நமக்காக ஜெபிக்க நினைத்தார், ஆகவே, பெரும்பாலும் மேல் அறையில் அவருடைய அப்போஸ்தலர்களுக்கான ஜெபமாக யோவான் 17ஆம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகளைப் படிக்கிறோம், நாம் அந்த பகுதியை உற்று கவனிப்போமானால் இயேசுவானவர் நமக்காகவும், அப்போஸ்தலர்களின் சாட்சியினால் அவரை நம்புகிறவர்களுக்காகவும் ஜெபித்தார். நாம் ஒன்றாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்! நாம் அதே ஒற்றுமையோடே, நோக்கத்தோடே, அவர் காண்பித்த தேவனின் குணாதிசயங்களோடே வாழ வேண்டுமென்று விரும்புகிறார். அப்படி வாழவில்லையென்றால், இந்த உலகம் எப்படி தேவன் தன்னுடைய குமாரனை அனுப்பினார் என்றறியும்? எதை விசுவாசிக்கவேண்டுமென்று எப்படி அறிந்துக் கொள்ளுவார்கள்? இயேசு அவர்களுடைய இரட்சகர் என்று எப்படி கண்டுக் கொள்ளுவார்கள் ?
என்னுடைய ஜெபம்
பிதாவே, எங்களை மன்னித்து, சீர்படுத்தி, உம்முடைய சீஷர்களை போல நாங்களும் வாழ்க்கையில் எவைகள் முக்கியமானது என்று பார்க்க உதவியருளும். எங்களை வெவ்வேறு மதக் குழுக்களாகப் பிரிக்கும் தடைகளை உடைக்கவும், எங்களை சுற்றிருக்கிறதான முக்கியமான காரியங்களில் ஒற்றுமையை கண்டுபிடிக்க உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.