இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் வாலிபப்பிராயத்திலே இருக்கும்போது, நாம் கையிட்டு செய்ய வேண்டிய பல காரியங்கள் உண்டு. பல கேளிக்கை சிற்றின்பம் மற்றும் உற்சாகமான விஷயங்கள், நாம் முக்கியமாக செய்ய வேண்டிய காரியங்களை செய்வதிலிருந்து நம்மைத் திசைதிருப்பலாம். எனவே, நம் உணர்வுகளையும் பொறுப்புகளையும் அவருடைய கிருபையை கொண்டு அவைகளை நிர்வகிக்க உதவும்படி தேவனிடம் மன்றாட வேண்டும். தேவன் எவைகளை நன்மையான காரியங்கள் என்று அழைக்கிறாரோ அவைகளுக்காக நாம் நம் இளமையின் ஆற்றலையும் உற்சாகத்தையும் உபயோகித்து வாழ வேண்டும். முதுமை பெரும்பாலும் ஒரு வகையான வரம்புகளைக் கொண்டுவருகிறது. அந்த வயது உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தது இல்லை! இந்த உண்மை வாழ்க்கை மோசமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, நாம் வயதாகிவிடுவதற்கு முன்பு நமது முன்னுரிமைகளை சிறப்பானதாக அமைக்க வேண்டும். நம்பிக்கையின் பாடங்களை நம் இளமைப் பருவத்தில் கற்றுக்கொள்ள முற்படுவோம் அதின்மூலமாக நாம் நம் வாழ்க்கையை ஞானத்தோடும், முதிர்ச்சியுடனும் சந்தோஷமாக வாழ வகைசெய்யும், இன்னுமாய் நமக்குப் பின்வரும் வாலிப மக்களை வழிநடத்தவும் உதவும். இதன்மூலம், வாழ்க்கைப் பாதையில் நமக்கு பின் வருபவர்களுக்கு நல்ல உதாரணங்களாக நம் வாழ்க்கையை வாழலாம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே, இன்று கிறிஸ்துவின் சபையில் உள்ள இளைஞர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடைய சத்தியத்தை கண்டுபிடித்து இயேசுவானவரின் அடிச்சுவடுகளை பின்பற்றும்போது அவர்களுக்கு ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தாரும் . அவர்களின் விசுவாசம் துடிப்பாகவும், மகிழ்ச்சியாகவும், வெற்றியுடனும் இருக்கட்டும்! உம்முடைய மகிமையையும் அன்பையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். உம்முடைய மாறாத சமூகமும் , வெற்றியும், கிருபையையும் அவைகளின் ஆழமான வாக்குத்தத்தங்களினால் பிற்காலங்களில் அவர்களைத் தாங்குங்கள். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.