இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆம், நாம் அனைவரும் நொறுங்குண்டோர்களும் , குறைபாடுள்ளவர்களும், கறைபடிந்தவர்களுமாய் இருக்கிறோம் (ரோமர் 3:9-11, 23-24). அல்லது, தேவன் நம்மை இரட்சிப்பதற்கும், ஆவியானவர் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்கும், இயேசு நம்மைத் தம் குடும்பத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்பு குறைந்தபட்சம் நாம் அப்படித்தான் இருந்தோம் (1 கொரிந்தியர் 6:9-11). தேவனை ஸ்தோத்தரியுங்கள்! தேவனுடைய அளவற்ற கிருபைக்காக அவரைப் போற்றி துதியுங்கள் . இயேசுவின் கிரியைகளுக்காக தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள் . பரிசுத்த ஆவியின் மாறாத பிரசன்னத்திற்காக தேவனைத் துதியுங்கள். இவற்றின் காரணமாக, நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாகவும், பழுதற்றவர்களாகவும், குற்றஞ்சாட்டப்படாதவர்களாகவும் நிற்க முடியும். (கொலோசெயர் 1:22).

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே, பரிசுத்தமான தேவனே , இயேசுவானவர் தாம் சுயமாய் அளித்த அன்பின் தியாகத்தின் பலியின் மூலமாக என்னை பாவ வழிகளிலிருந்து மீட்டதற்காக உமக்கு நன்றி. உம்முடைய பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் வல்லமையினால் அவரைப் போல் ஆக என்னை பெலப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. அடியேன் சொந்த முயற்சியின் மூலமாக என்னால் முடிந்ததை விட, உமது கிருபையினால் என்னால் முடிந்ததை விட மிகவும் அதிகமாக செய்ய எனக்கு உதவியதற்காக உமக்கு நன்றி. அன்பான தேவனே, பாவத்திலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காகவும், குற்றத்திலிருந்து என்னை மீட்டதற்காகவும், உமது மகிமையின் பிரசன்னத்தில் பங்குகொள்ள என்னை மீட்டதற்காகவும் உமக்கு கோடானு கோடி நன்றி. இயேசுவின் நாமத்தினாலே அடியேன் உம்மைப் போற்றி துதித்து, ஜெபிக்கிறேன் ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து