இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"அவனவன் தன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரைப் பின்பற்றுங்கள்" என்று இயேசுவானவர் நமக்கு நினைப்பூடுகிறார் . மெய் வழியையே நாம் அனுதினமும் தேர்ந்தெடுக்கவேண்டும். அறிந்தே அவரை நம் வாழ்க்கையின் மையத்தில் வைக்காமல் இருப்பதும் , நம்முடைய எல்லா முடிவுகளிலும் அவரை முதன்மையாய் வைக்காமலும் , அப்படி இருப்பது அவர் நம்மை வழிநடத்த அழைக்கும் வாழ்க்கை பாதையிலிருந்து சிறிது தூரம் வழிவிலகுவதற்கு ஏதுவாகும் . உணர்வுபூர்வமாக அவரைப் பிரியப்படுத்த முயற்சிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் அவரை நம் வாழ்வின் விளிம்பில் வைக்கும் முடிவாகும். எனவே நம் இருதயத்தை அவர் மீதே வைப்போம். அவருடைய வழியையும், மெய்வழியையும், ஜீவனுள்ள வழியையும் தேர்ந்தெடுத்து, அவருடைய சித்தத்தைச் அறிந்து செய்வதில் நம் இருதயங்களை வைப்போமாக .
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவே , இன்று உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் பின்பற்றவுமான வழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் உமது சத்தியத்தை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் , நான் அதை மனோவாஞ்சையாய், இணக்கத்துடணும் வாழ என் இருதயத்தைத் திறந்தருளும் . என் முழு இருதயத்தோடும் , ஆத்துமாவோடும் , மனதோடும் மற்றும் பெலத்துடனும் உம்மை பின்பற்ற நான் இன்று மீண்டும் முடிவு செய்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.