இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் ஜனங்களாகிய நம்மை எந்த எதிரிகளால் தோற்கடிக்க முடியும்? நம்முடைய பரிசுத்த தேவனின் பிரசன்னம் நம்மிடையே இருப்பதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது அப்படி ஒருவருமில்லை ! நம்முடைய தேவன், நம்மை விடுவிப்பவர், வல்லமையிலே மகத்துவமுள்ளவர் , பரிசுத்தத்திலே ஆச்சரியமானவர் , நம்முடைய எல்லா எதிரிகளைவிடப் மிகவும் பெரியவர். வரலாறு முழுவதையும் நாம் பார்ப்போமானால் , கர்த்தர் தம்முடைய மக்களாகிய நமக்காகவும் அவருடைய அன்பையும், பிரசன்னத்தையும் , வல்லமையையும் அநேகமுறை நிரூபித்திருக்கிறார். எனவே, சாத்தான் நம்மை என்ன அச்சுறுத்தினாலும் நாம் சற்றே பயப்படாமலும் கலங்காமலும் இருப்போம் , ஏனென்றால் நம்முடைய இரட்சகர் முன்னமே நரகம், பாவம், மரணம், சாத்தான் மற்றும் பேய்களை ஜெயித்துவிட்டார் . அந்த ஜெயத்தை அவருடன் ஒரு நாள் நித்தியக்காலமாக அனுபவிப்போம்.

Thoughts on Today's Verse...

What foe can defeat us as the people of God? None when we gladly welcome the presence of our holy God among us! Our God, our Deliverer, is mighty in power, awesome in holiness, and greater than any of our foes. Throughout history, the Lord has repeatedly proven his love, presence, and power in and for us, his people. So, we can refuse to fear what the evil one threatens to do to us because our Savior has already defeated hell, sin, death, Satan, and demons. And we will enjoy that victory with him one day forever.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என் அச்சத்தை அமைதிப்படுத்தி, என் கவலை நிறைந்த இருதயத்தை ஆற்றியருளும் . உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் , என் விசுவாசத்திற்கு விரோதமான மற்றும் உம்முடைய நம்பிக்கைக்கு எதிரான உலகில் உமக்காக நான் வாழ முற்படுகையில், தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க என்னை ஆசீர்வதித்தருளும் . இந்த கிருபைகளை என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

My Prayer...

Abba Father, calm my fears and soothe my anxious heart. By the power of your Spirit, please bless me with boldness and confidence as I seek to live for you in a world that is often hostile to my faith and opposed to your values. I ask these graces in the name of Jesus. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of உபாகமம்-Deuteronomy - 7:21

கருத்து