இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆபிரகாம் மற்றும் தாவீதுக்கு தேவனானவர் அளித்த வாக்குத்தத்தங்கள் , இயேசுவின் மூலம் தேவன் நடப்பித்த கிரியைகள் , ஆபிரகாமுக்காக மற்றும் தாவீதுக்கான தேவனுடைய வார்த்தைகள் இரண்டையும் அற்புதமாக இயேசுவுக்காக பாதுகாத்தது எவ்வளவு அதிசயமான காரியம் அல்லவா . இவைகள் தேவனானவர் எப்பொழும் உண்மையுள்ளவர் மற்றும் வல்லமையுள்ளவர் என்பதற்கு சாட்சியாகும். இன்று நம் உலகில் நிலவும் துரோகம், நிந்தனை மற்றும் துன்மார்க்கத்தால் நாம் சோர்வடையும் போது, ​​​​நம் தேவனின் உண்மைத்தன்மையையும் அவர் தேர்ந்தெடுத்த மக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மகத்தான வல்லமையையும் நாம் எப்பொழுதும் நினைவிலே கொள்ள வேண்டும். மக்கள் என்ன செய்தாலும், செய்ய மறுத்தாலும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தவறாது. தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களையும், திட்டங்களையும் நிறைவேற்ற தம்முடைய மக்களில் மீதமுள்ள ஒரு உண்மையுள்ள மனுஷனை எடுத்துப் பயன்படுத்துவார்! இயேசுவினுடைய வரலாறு , தாவீது மற்றும் ஆபிரகாமின் காரியங்களை திரும்பி பார்க்கும்போது , அந்த உண்மையை நமக்கு உறுதிப்படுத்துகிறது!

என்னுடைய ஜெபம்

எல்லா ஜனங்களையும் போஷிக்கிறவரும், பாதுகாக்கிறவருமாகிய பிதாவே , உம்முடைய வல்லமையின் மீது தைரியமுள்ள பிரமிப்பான உணர்வையும், உனது உண்மைத்தன்மையைக் கண்டு பயபக்தியுடன் கூடிய வியப்பையும் எனக்குத் தாரும் . உம்மைப் போல வேறு எந்த உயிருள்ள ஜீவனுக்கும் இப்படிப்பட்ட வல்லமை இல்லை, ஏனென்றால் நீர் மாத்திரமே தேவன் . உமது மகிமைக்காகவும் கிருபைக்காகவும் நான் உள்ளத்தின் ஆழத்திலிருந்து போற்றுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து