இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உதாரத்துவம் என்பது அன்பை சந்தோஷத்துடன் கிரியைகளினால் வெளிப்படுத்துவதாகும். உதாரத்துவம், நீதி ஆகிய இவ்விரண்டுமே நம்முடைய தன்னலமான உலகில் மிகவும் அவசியமான குணாதிசயங்கள் - மேலும் தேவன் நீதியும் , மிகுந்த கிருபையும், இரக்கமும்,சத்தியமும் , தயவும் நிறைந்த குணாதிசயம் கொண்டவர் (யாத்திராகமம் 34:5-7; சங்கீதம் 85:4-13). உதாரத்துவம்,விசுவாசம், அன்பு ஆகிய இந்த மூன்று குணாதிசயங்களும் நம் பிதாவினால் தொடப்பட்ட இருதயங்களிலிருந்து நம் உலகிற்கு வருகின்றன!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , எனது அன்பு, எனது நேரம், எனது மன்னிப்பு மற்றும் எனது செல்வம் ஆகியவற்றில் உதாரத்துவமாக இருக்க வேண்டியவர்களை நான் இன்று சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும். நீர் அடியேனை நடத்தியது போல, அடியேனும் அவர்களை நேர்மையாகவும் அன்புடனும் நடத்த எனக்கு உதவியருளும் . உம்முடைய தயை தேவைப்படும் மற்றவர்களுக்கு என் வாழ்வு உமது கிருபையை பிரதிபலிக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.