இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சரியான நேரம் என்றால் எல்லாம் கைக்கூடி முடியும். சரி, ஒருவேளை ஒன்றும் இல்லாமற்போகும் , ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் . தேவனுடைய அநாதி திட்டமும் வல்லமையும் நமக்கு யாவற்றையும் கொடுக்கிறது . அவருடைய திட்டத்திற்கான தேவனுடைய நேரத்தையும் வல்லமையையும் கண்டறிவது மிக அவசியமானது . மோசேவை தேவனானவர் தம் ஜனங்களை மீட்க அழைப்பதற்கு முன்பாக, மோசேயானவரே தானாகவே தேவனுடைய ஜனங்களை மீட்க தன்னையே முன்னிறுத்தியப்போது , அவர் அதிலே தோல்வியுற்றார். நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் தாழ்த்தப்பட்ட பிறகு, தேவனின் ஆவிக்குரிய வல்லமையிலும், சர்வவல்லவரின் திட்டத்தின்படியும் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க தேவன் மோசேயை மீண்டும் அழைத்தார். இறுதியில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் (யாத்திராகமம்) வழிவகுத்தன - எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய பரிசுத்த ஜனங்களை அழைப்பது என்பது மீட்பு மற்றும் மறுபிறப்பாகும் . தேவனுடைய நேரத்தைப் புரிந்துகொள்வதற்கான ஞானத்திற்காக எப்பொழுதும் ஜெபிப்போம், அதனால் அவருடைய நோக்கத்திற்காக, அவருடைய திட்டத்தின்படி, அவருடைய வல்லமையின் அடிப்படையில் நம் வாழ்க்கையை வாழ முடியும்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, காத்திருக்க வேண்டியிருப்பதால் நான் அடிக்கடி பொறுமையிழந்து விரக்தியடைகிறேன். அன்பான தேவனே, உம்முடைய கால அட்டவணையை அவசரப்படுத்த முயற்சித்ததற்கும், எனது திட்டம் உங்களுடையது என்று கருதுவதற்கும் அடியேனை தயவாய் மன்னித்தருளும் . என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எப்போது செயல்பட வேண்டும் என்பதை அறிய, உமது பரிசுத்த ஆவியினால் எனக்கு ஞானத்தை தந்து வழிநடத்தும் . இயேசுவின் நாமத்தினாலே , இந்த பொறுமை மற்றும் புரிதலுக்காக நான் ஜெபிக்கிறேன் உம்மிடம் ஜெபிக்கிறேன் . ஆமென்.