இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் மாம்சத்திலே வெளிப்பட்டார் , யோவான் தனது சுவிசேஷத்தை ஆரம்பித்தபோது இயேசுவை இப்படி விவரித்தார் (யோவான் 1:14-18). இயேசுவானவர் தேவனின் சிறந்த செய்தியாகவும், மனுஷ வடிவிலே தேவனைவெளிப்படுத்தியவராகவும் இருந்தார் (எபிரேயர் 1:1-3). இயேசுவின் பிறப்பு என்பது அவருடைய காலத்தில் இருந்த கூட்டத்தாரோ அல்லது நம் காலத்தில் இருக்கும் நாமோ முழுமையாக அறிய முடியாத ஒரு ரகசியம் . இந்த உண்மை நமது மனித அனுபவத்திற்கும் நித்திய யதார்த்தத்தைப் பற்றிய வரையறுக்கப்பட்ட அறிவுக்கும் அப்பாற்பட்டது. எனவே, இயேசுவின் விமர்சகர்கள் அவரை மேசியாவாக இருக்க முடியாத ஒருவராக விரைவில் வகைப்படுத்தியதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் எங்கிருந்து வந்தார் என்று அறியவில்லை - இயேசு பெத்லகேமில் பிறந்த நசரேயன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர் தேவனாகவும், ஆதியிலே தேவனுடனும் இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவரது பூர்வீகம் மற்றும் பல விஷயங்களைப் பற்றி ஜனக் கூட்டம் தவறாக நினைத்தது.கிறிஸ்துவில் உள்ள அன்பான நண்பரே, இயேசு நம்முடைய இரட்சகராக, கர்த்தராகிய கிறிஸ்து என்பதை நாம் புரிந்து கொள்ள முற்படுகையில், நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு , ஆச்சரியத்தில் நம்மை நிரம்பி வழியச் செய்கிறார் ! எனவே, வாருங்கள், அவருடைய மகிமையைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட, அவரை எல்லாவற்றிற்காகவும் அவரைப் போற்றிப் புகழ்வோம்!

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, இயேசுவின் மகிமையை பற்றிய எனது வரையறுக்கப்பட்ட பார்வைக்காக என்னை மன்னித்தருளும் . என் இரட்சகரின் வல்லமை, கிருபை, தியாகம், வெற்றி மற்றும் அன்பில் ஆச்சரியம், மகிழ்ச்சி, கிருபை, உற்சாகம், மகிமை மற்றும் பிரமிப்பு ஆகியவற்றைக் கண்டறிய என் இருதயத்தின் திறனை தயவுசெய்து செயல்படுத்துங்கள். என் இருதயம் சேகரிக்கக்கூடிய மற்றும் என் குரல் அறிவிக்கக்கூடிய அனைத்து மகிமையும் கனமும் பிதாவுக்கும், கிறிஸ்துவுக்கும், ஆவியானவருக்கும் உண்டாவதாக. பரிசுத்த ஆவியின் பரிந்துரையினாலும், இயேசுவின் நாமத்தின் அதிகாரத்தினாலும், நான் உமக்கு என் துதியைச் சமர்ப்பித்து ஜெபிக்கிறேன் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து