இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேதாகமத்திலுள்ள அனைத்து சிறந்த முன்னோர்கள் (பெரியவர்களானாலும், சிறியவர்களானாலும்) அவர்களுடன் இணைந்து தேவனுடைய ஊழியத்தை இன்னும் விசுவாசத்துடனும் தைரியத்துடனும் செய்யலாம். ஆனால் அவர் விரும்பும் இடத்திற்கு தைரியமாக முன்னேறிச் செல்ல, முதலில் நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கும், நம் பார்வையைச் சிதைக்கும், நம் சந்தேகங்களை பெரிதாக்கும், நமது ஆத்தும உற்சாகத்தையும், பெலனையும் பறிக்கும் பாவத்தை விட்டுவிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , என்னுடைய பாவத்திற்காக என்னை மன்னியுங்கள். என்னுடைய வெளியரங்கமான பாவங்கள் மட்டுமல்ல, பரிசுத்தமில்லாத விஷயங்களில் ஈடுபடவும், ஆத்துமாவுக்கு ஆபத்தான விஷயங்களில் மனப்போன போக்கில் செலவிடவும் , சாத்தானின் உலகில் எஞ்சியிருக்கும் விஷயங்களுக்கு என்னை வெளிப்படுத்தவும் நான் தயாராக இருக்கிறேன். உம்மிருந்து என்னைத் திசைதிருப்பும் விஷயங்களை வேண்டாம் என்று சொல்லவும், உம்மைப் போலவே இருக்கக் கூடிய பரிசுத்தமான காரியங்களை அதிக ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளவும் எனக்கு பெலனைத் தந்தருளும் . என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து