இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு கயிற்றின் மேல் நடப்பவர்கள் தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கியே தன் பார்வையை வைத்திருப்பார்கள் , ஒருபோதும் தரையில் அல்லது தம் தோள்களுக்கு பின்னால் இருப்பதைப் பார்க்கமாட்டார்கள். இயேசுவோடு கூட நடப்பதற்கான வழி, இலக்கை நோக்கியே நம் கண்ணை வைத்திருப்பது, அவர் மறுபடியுமாய் வரும்போது அவர் எப்படியாய் ஜெயித்தாரோ அவ்வண்ணமாகவே ஜெயம் நமக்காகக் காத்திருக்கிறது, இப்பூமியில் அல்ல (நமது தோல்விகள்) மற்றும் பின்னால் அல்ல (நம் சாதனைகள்) . நாம் பரலோகத்தில் அவருடனே கூட நடக்கும் வரை இயேசுவை நோக்கியேபார்த்து நடப்பதே கிறிஸ்தவ நடையின் குறிக்கோளாகும் .

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, நீங்கள் என்னைப் பெயர் சொல்லி அழைத்து என்னுடனே கூட நடக்கும் நாளை எதிர்நோக்குகிறேன். அந்த நாள் மட்டும் , நான் என்னவாக இருக்க விரும்புகிறீர் , அடியேன் எதை செய்ய சித்தம் கொண்டிருக்கிறீர்,இன்னுமாய் அடியேன் செய்து முடிக்காதவைகளின் மீது என் கண்களை நிலைநிறுத்த உதவியருளும் . உமது கிருபையினாலும், இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலும் அதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து