இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் - அலமாரியின் கீழ் இருக்கும் எதையும் குடிக்க வேண்டாம், தெருவில் விளையாட வேண்டாம், நிறுத்தப்பட்ட கார்களுக்குப் பின்னால் இருந்து வெளியே செல்ல வேண்டாம் ... போன்ற கட்டளைகளை வைத்திருப்பார்கள். அப்படியே தேவனும் நமக்கு கட்டளைகளை வைத்திருக்கிறார். இந்த வழிகாட்டுதல் நம்மைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் நம்மை பாதுகாப்பதற்காக மாத்திரமே . அவருடைய நேர்மறையான மற்றும் தடைசெய்யப்பட்ட கட்டளைகள் இரண்டுமே , நமது பாதுகாப்பு மற்றும் பரிபூரணத்திற்கானவை. அவைகளால் நாம் ஜீவனைக் கண்டுபிடித்து அதைப் பாதுகாக்கிறோம். (பழைய ஏற்பாட்டுச் சட்டம் அனைத்து வகையான நேர்த்தியான சட்டங்களைக் (சரீரப்பிரகாரமான சுத்தம் ) கொண்டிருந்தது, அவை எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்டீரியா மற்றும் வைரஸ்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ளத் தொடங்கும் வரையிலும் அவைகளைப் பற்றிய அர்த்தம் விளங்காமலிருந்தது . இத்தனை ஆண்டுகள், இஸ்ரவேலர்கள் தேவனின் கட்டளையால் பாதுகாக்கப்பட்டனர். தேவன் ஏன் நியாயப்பிரமான சட்டங்களை முதலில் கொடுத்தார் என்பது உண்மையான புரிதல் அவர்களுக்கு இல்லாமற்போயிற்று .)
என்னுடைய ஜெபம்
பரிசுத்த ஆண்டவரே, உமது வார்த்தைகளை ஜீவனாக பார்க்கும்படி எனக்கு உதவுங்கள். என்னை ஆசீர்வதிக்கவும், என்னைப் பாதுகாக்கவும் உமது கட்டளைகளை, பரிசுத்தத்திற்கான உமது சித்தத்தை நீர் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். என் இருதயத்தை கடினமற்றதாய் மாற்றவும், என் வாழ்க்கையை உமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தினாலும் அவருடைய வல்லமையினாலும் நான் அதைக் கேட்கிறேன். ஆமென்.