இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தாவீது ராஜாவை எண்ணி முடியாத அளவிற்கு ஆசீர்வதித்தார். ஒரு பெரிய போர்வீரனாகவும் இஸ்ரவேலின் அரசனாகவும் இருக்க, புறக்கணிக்கப்பட்ட ஒரு இழிவான சிறிய சகோதரன் மற்றும் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த அவனை தேவன் கண்டு எடுத்தார். தாவீது ஒரு சிறுவனாக இருந்து போர் வீரனாகவும் , ஒன்றுமில்லாத ஒரு சிறிய நகரத்திலிருந்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் தலைவனாக மாறினார் . இருப்பினும், தாவீதின் கவலை என்னவென்றால், தேவன் தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிலைநிறுத்தி, தனக்கும் அவருடைய சந்ததியினருக்கும் நெருக்கமாக இருப்பார். தனது அற்புதமான வாழ்க்கையில் வேறு எந்த கண்டுபிடிப்பையும் விட, தாவீது எதிர்காலமும், ஒவ்வொரு போரும், எந்த உண்மையான நம்பிக்கையும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பிரசன்னத்திலும் அவனுடைய சந்ததியினரிடமும் உள்ளது என்பதை அறிந்திருந்தார். தேவன் பேசும்போது, ​​அவர் தம்முடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பார். தேவன் செயல்படும்போது, ​​அவர் மீட்கிறார், விடுவிக்கிறார், வெற்றிகளைக் கொண்டுவருகிறார். ஆகவே, தேவன் செய்ய விரும்புவதைச் செய்யும்படி தாவீது தேவனிடம் எப்பொழுதுமே கேட்டார்: அவருடைய மக்களை ஆசீர்வதித்து அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அவர் எங்களுடன் அதையே செய்ய முடியும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது!

Thoughts on Today's Verse...

God had blessed King David incredibly. God had taken him from a despised little brother and shepherd boy who became a great warrior and Israel's King. David went from an errand boy to a war hero, from a small nowhere town to become the leader of a great empire. David's concern, however, was that God would remain close to him and his descendants, upholding the promises he had made to David. More than any other discovery in his amazing life, David had learned that the future, that every battle, and that any real hope, lies in the presence of the Lord God of Israel with him and his descendants. When God speaks, he keeps his word. When God acts, he redeems, delivers, and brings victories. So, David asked God to do what God longs to do: bless his people and keep his promises. Which reminds us that he can do the same with us!

என்னுடைய ஜெபம்

நம்பிக்கைக்கும் மற்றும் கனத்துக்குரிய தேவனே , எங்களை ஆதரித்து, நிலைநிறுத்தி ஆசீர்வதித்த எங்கள் பிதாவே , எங்கள் வாழ்க்கையில் உம்முடைய பிரச்சனத்திற்க்காகவும் , எங்கள் எதிர்காலத்திற்கான உம்முடைய வாக்குறுதிகளுக்காகவும் நன்றி. நாங்கள் உமது வீட்டில் என்றென்றும் குடியிருக்கும்படி, நீர் வாக்குத்தத்தம் செய்தபடியே, மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை உமது சமுகத்தில் கொண்டுவரும். இயேசுவின் நாமத்தினாலே , நாங்கள் அதிக நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் ஜெபிக்கிறோம். ஆமென்.

My Prayer...

Trustworthy and honorable God, our Father who has sustained and blessed us, thank you for your presence in our lives and your promises for our future. Bring us into your presence with great joy, just as you promised, so that we can dwell in your house forever. In Jesus' name, we pray with anticipation. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 2 சாமுவேல்-2 Samuel - 7:29

கருத்து