இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"O Sacred Head" என்ற அழகான பழைய ஆங்கில பாடலில், இறுதி வசனம் இந்த வேண்டுகோளுடன் முடிவடைகிறது: "தேவனே , நான் ஒருபோதும், ஒருபோதும், உம்மிடம் என் அன்பை விட அதிகமாக வாழ அனுமதிக்காதே." இந்த உணர்வுடன், பழைய ஆங்கில பாடலின் பாணியில் மற்றொரு வசனத்தை சேர்க்க விரும்புகிறோம்: "ஆண்டவரே, அடுத்த தலைமுறை உம்மை அறியும் வரை என்னை ஒருபோதும், மரிக்கச் செய்யாதே !" அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு நான்கு தலைமுறைகள் தங்கள் நம்பிக்கையைக் கொண்டு சேர்க்கும் வகையில் நாம் வாழ வேண்டும் (2 தீமோத்தேயு 2:1-2). இதன் பொருள் எனது பேரக்குழந்தைகள் தங்கள் நம்பிக்கையை தங்கள் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே ஆம், "ஆண்டவரே, அடுத்த தலைமுறைகள் உம்மை அறியும் வரை, நான் ஒருபோதும், மரிக்காமல் இருக்கட்டும்!"

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் மகா பெரியவர்; எங்களுக்குப் பின் வரும் சந்ததிக்கு உமது ஆற்றலையும் மகிமையையும் போற்றக்கூடிய காரியங்களை அறிவிக்க எனக்கும் என் தலைமுறையில் உள்ளவர்களுக்கும் உதவியருளும் . உம்முடைய திருச்சபையின் எதிர்காலத்தை எனக்குப் பிறகு தொடர்ந்து வரும் தலைமுறையினரையும் அல்லது உம்முடைய ஜனத்தை உம் வீட்டிற்கு அதாவது பரம வீட்டிற்கு அழைத்து வர உம்முடைய குமாரனை அனுப்பும் வரை நம்பிக்கையுடன் ஆசீர்வதித்தருளும் . வருகிற ராஜாவாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து