இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீங்கள் நியாயப்படுத்துகிறவரா ? மற்றொரு நபரின் இருதயத்தின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?மற்றவருடைய செய்கையைப் பற்றி குற்றமாகவும் , எதிர்மறையாகவும் எடுத்துக் கொள்ளுகிறீர்களா? ஒருவருடைய இருதயத்திலுள்ள உள்நோக்கத்தை நாம் அறிய முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மற்றவர்களைத் தீர்ப்பதில் நாம் நியாயமற்ற முறையில் கடுமையாக அல்லது பாரபட்சமாய் விமர்சிக்கும்போது, தேவன் நம்மை எந்த அளவால் நியாயந்தீர்க்க வேண்டும் என்ற வரையறையை நாமே நிர்ணயித்துக் கொள்கிறோம். உங்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என் காரணமற்ற கடுமையினிமித்தம் தேவனுடைய கிருபையை பரிமாற்றஞ்செய்ய நான் தயாராக இல்லை. மற்றவர்களை இரக்கத்துடனும், பரிவுடனும் பார்க்க நான் கடினமாக உழைக்கப்போகிறேன் .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே, மற்றவர்களைப் பற்றிய எனது தீர்ப்பு நியாயமற்ற முறையிலும் கடுமையாகவும் இருப்பதற்கு தயவுசெய்து என்னை மன்னியும். உம்முடைய இரக்கமும் , கிருபையும் என் மீது செழிப்பாகவும், இலவசமாகவும் தாராளமாக இயேசுவுக்குள்ளாய் பொழிந்து கொண்டிருப்பதற்க்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுக்குள் உள்ள என் சக சகோதர சகோதரிகளின் நோக்கத்தையும், உற்சாகத்தையும் நான் மதிப்பிடும் விதத்தில் தயவுசெய்து மேலும் பரிவுடனும், இரக்கத்துடனும் இருக்க எனக்கு உதவியருளும்