இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் எதிரிகள் அவரைப் குற்றம்பிடிக்க பலமுறை வகைதேடினார்கள் . ஆயினும், தேவனுடைய திட்டத்தின்படி ஏற்ற நேரத்தில் இயேசு தம்மைத் தாமாகவே அவர்களிடம் ஒப்புக்கொடுக்கும் வரை யாராலும் அவரைக் பிடிக்க முடியாது என்பதை யோவான் நற்செய்தி நமக்கு மீண்டும் மீண்டும் நினைப்பூட்டுகிறது. இயேசு தம் பிதாவின் சித்தத்திற்குக் முழுவதுமாக கீழ்ப்படிந்ததைப் போலவே தேவனுடைய கால அட்டவணையையும் கவனமாகப் பின்பற்றி நடந்தார் . ஆகவே, இயேசு மரித்தபோது, ​​நம்மை மீட்டுக்கொள்ளவும், தம்முடைய பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்காகவும் அவ்வாறு செய்தார் என்பதை நாம் முழுமையான உறுதியுடன் அறிந்துகொள்ளலாம். தம்மைத் தற்காத்துக் கொள்ள வல்லமையற்றவராக,கர்த்தர் மரிக்கவில்லை. இயேசுவின் மரணம் தம்மை தாமாகவே முன்வந்து , தியாக பலியாகவும் , அவருடைய சொந்த பாதுகாப்பிற்கான தனது விருப்பத்தை வெறுத்து அவரது பிதாவின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்தார் . ஆம், பொல்லாதவர்கள் அவருடைய மரணத்திற்கு பொறுப்பு உண்டு ,ஆயினும் அவருடைய மரணம் நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டமுமாகும் ! இயேசு கீழ்ப்படிந்தார், நாம் இரட்சிக்கப்பட்டோம்! அவர் சரியான நேரத்தில், தேவனின் வேளையில் தம்மை தியாகம் செய்தார், எனவே நாம் பிதாவின் குடும்பத்தில் புத்திரசுவிகாரம் பெற்று , பாவம், மரணம், நரகம் மற்றும் தீய அடிமைத்தனத்திலிருந்து விடுப்பட்டோம் !

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, எங்கள் பிதாவைக் கனப்படுத்தியதற்காகவும், அவருக்குக் கீழ்ப்படிந்ததற்காகவும், உம் வாழ்க்கையில் அவருடைய நேரத்தைக் கடைப்பிடித்ததற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எனக்காக மரித்ததற்கும் என் பாவத்திலிருந்து என்னை மீட்பதற்கும் நன்றி. அன்பான பிதாவே , மகத்தான அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி. நீர் எனக்கு கொடுத்த மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான உணர்வை எனக்குக் கொடுங்கள், ஏனென்றால் என்னை மீட்டு மீட்டெடுக்க நீர் செலுத்திய மாபெரும் விலை எனக்குத் தெரியும். இயேசுவின் பரிசுத்த நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து