இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தனிமனித உரிமைகள் மீது ஆவேசப்பட்ட காலத்திலும் கலாச்சாரத்திலும் நாம் வாழ்கிறோம். "___ என் உரிமை." வெற்றிடத்தை நிரப்பினால் போதும். ஆனால் நம் தகுதி, அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் தேவனுடைய பிள்ளையாக இருக்க நம்மில் யாருக்கும் உரிமை இல்லை. தேவனின் கிருபை அந்த அதிகாரத்தை நமக்கு வழங்குகிறது. இந்த அதிகாரம் தேவனுக்கு மாபெரும் விலை கொடுத்து நமக்கு வந்தது. இயேசு பூமிக்கு வந்தார், வாழ்ந்தார், மரித்தார், மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். விசுவாசத்தின் மூலம் இந்த கிருபையைப் பெறுகிறோம் (எபேசியர் 2:8-10). நாம் இயேசுவை ஆண்டவராக விசுவாசிக்கும் போது தேவன் நமக்குப் புதிய பிறப்பைத் தருகிறார் (ரோமர் 10:9-10). நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்று, அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பங்கு பெறுவோம் (ரோமர் 6:3-14). பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாம் தேவனின் புதிய குழந்தையாகப் பிறந்தோம் (யோவான் 3:3-7; கலாத்தியர் 3:26-29; தீத்து 3:3-7). தேவனால் பிறப்பது, பரத்திலிருந்து பிறப்பது, "மறுபடியுமாய் " பிறப்பது (யோவான் 3:3-7) என்றால், சதந்திரவாளிகளின் அனைத்து உரிமைகளுடன் தேவனின் பரிசுத்தகுடும்பத்தில் பிள்ளைகளாக , கிறிஸ்து இயேசுவுடன் நாம் புத்திரசுவிகாரராக்கப் படுகிறோம் (ரோமர் 8:14-17; கலாத்தியர் 4:1-7).

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னையும் உம் பரிசுத்த குடும்பத்தில் சேர்த்ததற்கு நன்றி. இன்றைய என் வாழ்க்கை உம் செல்வாக்கு, குணாதிசயம் , இரக்கம் , பரிசுத்தம், ஆறுதல் , நீதி மற்றும் அன்பு ஆகியவற்றை பிரதிபலிக்கட்டும். என் நேசப்பிதாவே, நான் உம்மைப் போல இருக்க விரும்புகிறேன். ஆகவே, நான் பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம் குடும்பத்தில் பிறந்தது போல், இன்றே உம் ஆவியால் என்னை நிரப்புங்கள், இதனால் நான் இந்த நாளில் நான் செய்யும் மற்றும் சொல்லும் அனைத்திலும் உம்மைப் பிரதிபலிப்பேன். என் தந்தையின் இயல்பை பிரதிபலிக்கும் பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். என் மூத்த சகோதரர் இயேசுவின் நாமத்திலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து