இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
முதல் பார்வையில், -பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர் - . இந்த இரண்டு கருத்துக்களும் முரண்பாடாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒன்றோடு ஒன்று இனைக்கப்படாமல் இருப்பதாக தோன்றலாம். ஒருபுறம், பூமி என்று நாம் அழைக்கும் இந்த வெற்று இடைநிலை இடத்தில் தேவனுடைய நாமம் மகத்துவமானது . இருப்பினும், அதே நேரத்தில், தேவன் மகிமையானவர் மற்றும் உயர்ந்த வானங்களுக்கு மேலாக இருக்கிறவர் . இரண்டு வெவ்வேறு இடங்களின் தாக்கம் இஸ்ரவேலரின் வாழ்க்கையில் காண்பிக்ப்படுகிறது. அது இயேசுவின் வாழ்விலும், மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் தெளிவாக்கப்பட்டுள்ளது. பூமியில் நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரின் மகத்துவத்தை நாங்கள் தைரியமாக அறிவித்ததால், ஒரு நாள் பரலோகத்தின் மகிமையில் பங்குகொள்பவர்களாகிய நம்மால் மகிமைப்படுத்தப்படும்!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே, நான் உம்மை கனம்பண்ணி, இந்த பூமியில் அவரை ஒப்புக்கொண்டால், உமது சிங்காசனத்தின் முன் நான் நிற்கும் நேரம் வரும்போது, நீர் என்னை மகிழ்ச்சியுடன் கௌரவித்து, உமது தூதர்கள் முன்னிலையில் என் நாமத்தை அழைப்பீர் என்ற இயேசுவின் வாக்குத்தத்ததிற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், நான் உமக்கு நன்றிகளையும் துதிகளையும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.