இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நாசரேத்தில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் தனது ஊழியத்தை விவரிப்பதற்க்காக இந்தப் பகுதியை (பார்க்க லூக்கா 4) வாசித்தார். அவர் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், கட்டவும், இரட்சிப்பைக் கொண்டுவரவும், விடுதலையை வழங்கவும், கிருபையை அறிவிக்கவும், ஆறுதலளிக்கவும் வந்தார். இயேசு, பிதா தன்னை அனுப்பியபடியே நம்மை உலகிற்கு அனுப்பியிருந்தால் (யோவான் 20: 21-23), நாமும் அப்படியே போக வேண்டாமா?

என்னுடைய ஜெபம்

உமது ஆவியின் வல்லமை மற்றும் ஞானத்தின் மூலமாய் எனக்குள் வல்லமையுள்ள கிரியை நடப்பித்தருளும் , அன்புள்ள ஆண்டவரே,தயவுக்கூர்ந்து என் கண்களைத் திறந்து கிருபை, மீட்பு , ஆறுதல் ஆகிய இவைகளை நான் யாருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று என் பாதையில் நீர் வைத்திருக்கிருக்கிறீரோ, அவர்களைப் பார்க்கும்படி எனக்கு உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து