இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுக்கு ஸ்தோத்திரம் ! நம்முடைய நீதியை விளங்கச்செய்து , இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியாக, நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கொள்கையிலிருந்து இயேசுவானவர் நம்மை விடுவித்தார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நம் வாழ்கையில் தேவனுடைய சித்தத்தின்படி வாழ நாம் இப்போது ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம், அவர் நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கும்படி செய்கிறார் (ரோமர் 8:28-29) மேலும் (2 கொரிந்தியர் 3:18) நம்மை கிறிஸ்துவைப் போல் மாற்றுகிறார். அவரே நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார் (மத்தேயு 5:17). நாம் கிருபையால், விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்படுகிறோம், எனவே நாம் செய்ய வேண்டும் என்று தேவன் நீண்ட காலத்திற்கு முன்னமே ஆயத்தம் பண்ணினதுப் போலவே, நாம் நம்முடைய இரட்சகரைக் கனம்பண்ணுவதற்கு நன்றியுணர்வுடன் யாவருக்கும் நற்காரியங்களை செய்யலாம் (எபேசியர் 2:8-10).
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , உமது கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி. சர்வவல்லமையுள்ள தேவனே , என் மன்னிப்பைக் கொண்டுவர ஆச்சரியமான மற்றும் அற்புதமான தியாகத்திற்காக அடியேன் உம்மைப் போற்றுகிறேன். உன்னதமான ஆண்டவரே, உம்முடைய சித்தத்தின்படி என்னை வழிநடத்தி , இயேசு கிறிஸ்துவைப் போல, உம்முடைய உன்னத பண்புகள் நிறைந்த ஒரு நபராக என்னை மாற்றும் பரிசுத்த ஆவியின் ஈவுக்காக உமக்கு மகிமையும் கனத்தையும் கொண்டுவருகிறேன் . அவருடைய நாமத்தினாலே நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.