இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நியாயப்பிரமாணத்தின் நீதி வலியுறுத்தும் காரியங்களை நிறைவேற்றும் இரண்டு ஈவுகளை தேவன் நமக்கு நேர்த்தியாக தருகிறார், அவைகளை நியாயப்பிரமாணத்தால் நமக்கு ஒருபோதும் கொடுக்க முடியாது. முதலாவது , அவர் நம்மை மன்னிக்கவும், சுத்திகரிக்கவும், நம் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும் - அவருடைய குமாரனாகிய இயேசுவை - பரிபூரண பாவநிவாரண பலியாக கொடுத்தார் . இரண்டாவதாக, அவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அப்படியாக இருக்க நமக்கு அதிகாரம் அளிக்க அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தருகிறார். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் வாக்களித்ததை புதிய உடன்படிக்கையில் தேவன் நமக்குத் தருகிறார். அவருடைய திட்டம், அவருடைய வாக்குறுதிகள் மற்றும் அவருடைய ஈவுகளுக்காக தேவனை எப்பொழுதும் துதியுங்கள்!
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் தகப்பனே, உமது மகத்தான மற்றும் பரிபூரணமான ஈவுகளை - உமது விலையேறப்பெற்ற மற்றும் பரிபூரணமான குமாரன் மற்றும் ஆசீர்வாதமாய் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் எங்களுக்கு அதிகாரம் அளிக்கும் உம்முடைய ஒப்பற்ற அன்பிற்காகவும் மற்றும் கிருபைக்காகவும் நன்றி. இயேசுவின் நாமத்தினாலே மற்றும் பரிசுத்த ஆவியின் பரிந்துரையாலும், அன்பான பிதாவே , நான் உம்மைப் புகழ்ந்து, போற்றி நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.