இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தண்ணீருள்ள நதிகள் - வறண்ட நம்பிக்கைகளுக்கு ஜீவத்தண்ணீர் , வறண்டுப்போன இருதயங்களுக்கு குளிர்ந்த நீர், சோர்வுற்றவர்களுக்கும், இளைத்துப்போனவர்களுக்கும் புத்துணர்ச்சியூட்டும் நீர். இது நிச்சயமாக, நம் உதடுகளால் நாம் குடிக்கக்கூடிய ஒரு திரவத்தை விட மிக அதிகம். தேவனானவர் நம்முடைய ஆத்துமாவுக்கு இறுதியாக கொடுக்க விரும்பும் நீர் இது. இதுவே பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுவைத் தம் பிள்ளைகளுக்கு கொடுக்க அனுப்பினார். இயேசுவின் வாக்குத்தத்தங்களினால் நம்மைப் புதுபெலத்தோடும், புத்துணர்ச்சியோடும் , நாம் அவரை நெருங்கும்போது, ஆவியானவர் நம் ஆத்துமாக்களை மீட்டெடுப்பார், ஆவியின் ஜீவத்தண்ணீர் நமக்குள்ளே ஓடும் என்று நம்பி ஆகஸ்ட் மாதத்தைக் கழிப்போம்.
Thoughts on Today's Verse...
Streams of water — living water for dry hopes, cool water for parched hearts, refreshing water for those tired and weary. This is, of course, much more than a liquid we can drink with our lips. This is the ultimate water of the soul God longs to give us. It's what the Father sent Jesus to give his children. Let's spend the month of August refreshing ourselves with the promises of Jesus and trusting that, as we draw close to him, the Spirit will restore our souls, and the living water of the Spirit will flow within us.
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே, என்னை இரட்சிக்க இயேசுவை அனுப்பியதற்காகவும் , என்னைத் தாங்கி புதுப்பித்து என்னுள்ளே உமது பிரசன்னமாக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பியதற்காக உமக்கு நன்றி.குறிப்பாக இந்த மாதத்தில் அடியேன் என் இரட்சகரிடம் நெருங்கி வரவும் , உமது பரிசுத்த ஆவியின் புத்துணர்ச்சியூட்டும் ஜீவத் தண்ணீரால் என் ஆத்துமாவை மீட்டெடுக்கவும் நான் முயல்வதால், அடியேனை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Loving Father, thank you for sending Jesus to save me and the Holy Spirit to sustain and renew me and be your presence inside me. Please bless me, especially this month, as I seek to draw closer to my Savior and restore my soul with the refreshing living water of your Holy Spirit. In Jesus' name, I pray. Amen.