இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

காய்ந்த கிளையின் சுடரை யாராவது அணைக்க முயலும்போது, ​​தீப்பொறிகள் மேல்நோக்கி பறந்து காற்றின் வேகத்தினால் பரந்து சென்று, தீப்பொறிகள் எங்கும் பரம்பி , காட்டுத் தீயை வெகு தூரம் வரை கொண்டுசொல்லுகின்றன . ஆரம்பகால சபையை தோய்ந்துபோக செய்ய சாத்தான் உபத்திரவம் மற்றும் மரணத்தை பயன்படுத்த முயன்றான். சாத்தான் அந்த காலத்தில் இருந்த கிறிஸ்தவர்களை அவர்களுடைய வீடுகளை விட்டு ஓடும்படி செய்தான், ஆயினும் அவர்கள் எங்கு சென்றாலும் பயப்படாமல் இயேசுவைப் குறித்து பிரசங்கித்தார்கள் . தேவன் அவர்களின் துணிச்சலைப் பயன்படுத்தி இயேசுவின் நற்செய்தியை காட்டுத்தீ போல வெகுதூரம் பரப்பினார். இயேசு கட்டளையிட்டதைச் செய்ய ஒவ்வொரு விசுவாசியும் ஆவிக்குரிய சுவாசத்தினால் தூண்டப்பட்ட தீப்பொறியாக இருந்தார்கள்: "எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் சாட்சிகளாக இருங்கள்" (அப்போஸ்தலர் 1:8 )

என்னுடைய ஜெபம்

இரக்கமும், கிருபையுமுள்ள மகா தேவனே , நான் சந்திக்கும் அனைவருடனும் உம் அன்பையும் வல்லமையையும் பகிர்ந்து கொள்ளவும் , அவர்களை எந்த சூழ்நிலையில் எனக்கு அறிமுகம் ஆனாலும் அப்பொழுது இயேசுவை குறித்து சொல்ல எனக்கு ஒரு பரிசுத்தமான ஆர்வத்தை தாரும் . நீர் என் வாழ்க்கையில் கொண்டு வருபவர்களுடன் இயேசுவைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பார்ப்பதற்கான ஞானத்தையும் செயல்பட தைரியத்தையும் எனக்குத் தந்தருளும் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலும், அவருடைய மகிமைக்காகவும் நற்செய்திக்காகவும் இவை அனைத்தையும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து