இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மோசேயும் எலியாவும் இயேசுவின் நெருங்கிய சீஷர்களுக்கு முன்பாக "மறுரூப மலையின் மேல் " இயேசுவுடன் தோன்றினார். உண்மையுள்ள யூதர்களாகிய அவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான மேன்மையாகும் - இஸ்ரேலின் பெரிய தலைவரான மோசேயும், தேவனுடைய பெரிய தீர்க்கதரிசியாகிய எலியாவுக்கும் தேவனுடைய மகிமையைக் காணும்படி பாக்கியம் கிடைத்தது . இருப்பினும், மோசேயும் எலியாவும் எவ்வளவு முக்கியமானவர்களோ, ஆயினும் இயேசுவானவர் மாத்திரமே தேவனுடைய குமாரன், இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை இயேசுவின் சீஷர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவனானவர் விரும்பினார் (மத்தேயு 1:23; யோவான் 1:1-18; எபிரேயர் 1:1-3). இயேசுவின் இன்றைய சீஷர்களான நாம், குமாரனின் வார்த்தைகள் மாத்திரமே நமது மெய்யான சத்தியம் என்றும் அவைகள் தேவனுடைய அதிகாரத்துடன் பேசப்படுகின்றன என்பதை அறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் புத்துணர்ச்சியடையவும், புதுப்பிக்கப்படவும், மறுசீரமைக்கப்படவும், மாற்றப்படவும் வேண்டுமானால், தேவனுடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு, அவைகளுக்கு கீழ்ப்படிவதன் மூலம் தொடங்கபட வேண்டும்!
என்னுடைய ஜெபம்
நீதியுள்ள பிதாவே, இயேசுவின் பரிசுத்த வார்த்தைகளாகிய நீதியின் மேல் பசி தாகம் உண்டாகும்படி செய்யும். நான் அவருடைய வார்த்தைகளை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவைகளுக்கு கீழ்ப்படிய முயலும்போது தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இயேசுவின் வாஞ்சையை போலவே எனது வாழ்க்கையின் ஊழியமும் உம்மை அதிக கனம்பண்ண வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்கு தயவுக்கூர்ந்து இன்று எனக்கு மெய் ஞானத்தை கொடுங்கள்: (அ) உண்மையோடும் , இரக்கத்துடனும் மற்றும் கீழ்ப்படிதலுடனே முடிவுகளை எடுங்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுங்கள். (ஆ) இயேசுவின் நீதியாகிய குணத்தையும், கிருபையுள்ள உருக்கத்தையும் , மெய்யான அன்புள்ள இரக்கத்தையும் கனப்படுத்தும் வழிகளில் வாழுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.