இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழைய ஏற்பாடு அன்பின் அழகான உடன்படிக்கையாகும், ஏனெனில் தேவனானவர் விழுந்துபோன மனிதகுலத்தை மீட்டு, ஆபிரகாமின் வம்சத்தின் மூலமாய் இயேசுவை நமக்குக் கொண்டுவர அவரது வாக்குத்தத்தங்களையும் கிருபைக்கான திட்டங்களையும் செயல்படுத்த விரும்புகிறார் . அந்த பழைய உடன்படிக்கை எவ்வளவு வல்லமையுள்ளதாக இருந்தது , ஆனால் நாமோ இப்பொழுது ஒரு மேலான புது உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். இந்த புது உடன்படிக்கை அதைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது. ஏன்? இந்தப் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் தேவனுடைய நேச குமாரன் இயேசுவே, அவர் ஒரு பிரதான ஆசாரியரும், சிறந்த பலியும் , தேவனின் மகத்தான வாக்குறுதிகளை அவருடைய மக்களுக்கும் இழந்த உலகத்துக்கும் உத்தரவாதம் அளிப்பவர் அவரே !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும், நீண்ட காலத்திற்கு முன்பு நீர் கொண்டுள்ள திட்டத்தை நிறைவேற்றவும், உம்முடைய தீர்க்கதரிசிகளால் வெளிப்படுத்தப்பட்ட திட்டத்தை நிறைவேற்றவும் இயேசுவை அனுப்பியதற்காக நன்றி. ஒரு சிறந்த உடன்படிக்கைக்கும் மற்றும் நம்பிக்கைக்கும் உத்தரவாதம் அளிப்பவரே, என் ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் நன்றிகளையும் மற்றும் துதிகளையும் செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து