இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மற்றவர்களின் பாவங்களை நாம் எளிதாகக் கண்டறியும்போது, நம்முடைய சொந்த பாவத்தின் துல்லியமான,நேர்மையான பட்டியலை எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் மற்ற யாவரையும் மதிப்பிடுவதற்கு முன்பாக நம்முடைய சொந்த பாவங்களை கையாள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவனுக்கு முன்பாக என் பொறுப்பு என்னவென்றால் , மற்றவர்களைக் குற்றம் பிடிப்பது அல்ல, ஆனால் என்னில் நான் காணும் பாவங்களையும் பாவ ஆசைகளையும் கண்டனம் செய்து , பின்னர் மாறுப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்து , அதை முற்றிலும் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் ஒப்புவித்து , கர்த்தராகிய ஆண்டவரைக் கனப்படுத்தி வாழும் வாழ்கையாகும் !
Thoughts on Today's Verse...
When we find it easy to identify the sins of others, God wants us to be reminded of how important it is for us to take a rigorously honest inventory of our own sinfulness. He wants us to deal with our sins before we evaluate anyone else. My responsibility before God is not to condemn others but to condemn the sins and sinful desires I find in me, then live differently, wholly and holy, to honor the Lord God!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , என் சொந்த பாவங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . குறிப்பாக அன்பான பிதாவே , விமர்சனம் மற்றும் தீர்ப்பின் ஆவியிலிருந்து எழும் பாவங்களுக்காக என்னை மன்னியும் . இத்தகைய தீய மற்றும் புண்படுத்தும் பழக்கங்களில் இருந்து என்னை விடுவித்தருளும் . என் பாவங்களை மன்னித்து, உமக்காக உண்மையும், உத்தமமாக வாழ முயலும் என்னை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Forgive me, please, dear God, for my sins. Forgive me, especially dear Father, for the sins arising from a critical and judgmental spirit. Deliver me from such hurtful and evil habits. Forgive of my sins, and please bless me as I seek to live for you with faithfulness. In Jesus' name, I pray. Amen.