இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஓய்ந்திருப்பாயாக! ஆண்களுக்கு , எந்த நேரமும் அவர்களுக்கு கடினமாக இருக்கும், ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்ந்திருப்பது மிகவும் கடினம். பூமத்திய ரேகையின் எந்தப் பக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து இது கோடையின் முடிவு அல்லது குளிர்காலத்தின் முடிவு ஆகும். எந்த இடத்திலும் நாம் இருந்தாலும் சரி , ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாளை ஓய்வெடுக்க எடுத்துக்கொள்வதன் மூலம் தேவனுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும், மேலும் அந்த நாளிலே அவரை நெருங்கி வருவதற்கு அதை பரிசுத்த நேரமாக வைத்துக் கொள்ள வேண்டும் (யாத்திராகமம் 20:11). தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளில் இளைப்பாறுவதன் மூலம் நாம் ஓய்ந்திருக்க வேண்டும் அந்த நாளிலே தேவனின் சித்தத்தை நாம் கேட்க வேண்டும், மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஓய்வெடுக்கவும், அவருடைய கிருபையிலும், இளைப்பாறுவதலிலும், சமூகத்திலும் ஓய்ந்திருக்க அவர்களை அனுமதிக்க வேண்டும்.
என்னுடைய ஜெபம்
தேவனே , உம் இளைப்பாறுதலில் ஓய்ந்திருக்க, வேண்டுமென்றே நான் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் பரபரப்பாக இருந்ததற்காக அடியேனை மன்னித்தருளும். பிதாவே , இந்த வாரத்தின் முதல் நாளில் உம் சமூகத்தில் நீர் விரும்புகிற வண்ணமாக, நான் என் குடும்பத்துடன் இருக்க உதவியருளும் . அன்புள்ள பிதாவே , என் ஆத்துமாவை மீட்டுத் தந்தருளும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உமது மீட்ப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மகிழ்ச்சியினால் அடியேனை நிரப்புங்கள். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.