இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​​​நாம் யாவரும் நியாயந்தீர்ப்பில் நிற்கவேண்டியதை பற்றி நினைக்கிறோம். தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதன் அர்த்தம், அவருடைய சித்தம், அவருடைய சட்டத்திட்டங்கள் மற்றும் அவருடைய கிருபையின் அடிப்படையில் நம்மை நியாயந்தீர்க்க அவர் இருப்பார் என்று ஏசாயா நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நம்முடன் இருக்கிறார், நம்மை இரட்சிக்கவே பார்க்கிறார், மாறாக நம்மை தண்டிக்க விரும்பவில்லை . புதிய ஏற்பாட்டு உவமையை பயன்படுத்தி, நாம் நமது நியாயாதிபதி முன் நிற்கும்போது, ​ நாம் பிதாவை பார்க்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள நியாயாதிபதியே , என் வாழ்க்கைக்குரிய அநாதி தீர்மானம் , என் எதிர்காலம் மற்றும் என் வாழ்க்கை உம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்காக இயேசுவை ஜீவபலியாக கொடுத்ததின் மூலம் நீர் என்மீது கொண்ட அன்பை நான் அறிவேன். உமது கிருபையால் என்னை இரட்சிக்க வேண்டும் என்ற உமது சித்தத்தை நான் அறிவேன். பரிசுத்தத்திற்கான முக்கியத்துவம் உம் குமாரனுடைய ஜீவ பலியினால் பூர்த்தி செய்யப்பட்டது என்பதை நான் அறிவேன். எனவே தேவனே , என் வாழ்க்கையையும், என் ஆத்துமாவையும், என் நித்திய எதிர்காலத்தையும் உம்மிடம் நான் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து