இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்றவர்களின் பாவங்களை நாம் எளிதாகக் கண்டறியும்போது, ​​நம்முடைய சொந்த பாவத்தின் துல்லியமான,நேர்மையான பட்டியலை எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் மற்ற யாவரையும் மதிப்பிடுவதற்கு முன்பாக நம்முடைய சொந்த பாவங்களை கையாள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவனுக்கு முன்பாக என் பொறுப்பு என்னவென்றால் , மற்றவர்களைக் குற்றம் பிடிப்பது அல்ல, ஆனால் என்னில் நான் காணும் பாவங்களையும் பாவ ஆசைகளையும் கண்டனம் செய்து , பின்னர் மாறுப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்து , அதை முற்றிலும் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் ஒப்புவித்து , கர்த்தராகிய ஆண்டவரைக் கனப்படுத்தி வாழும் வாழ்கையாகும் !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , என் சொந்த பாவங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . குறிப்பாக அன்பான பிதாவே , விமர்சனம் மற்றும் தீர்ப்பின் ஆவியிலிருந்து எழும் பாவங்களுக்காக என்னை மன்னியும் . இத்தகைய தீய மற்றும் புண்படுத்தும் பழக்கங்களில் இருந்து என்னை விடுவித்தருளும் . என் பாவங்களை மன்னித்து, உமக்காக உண்மையும், உத்தமமாக வாழ முயலும் என்னை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து