இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வேத வசனத்திலிருந்து ஒரு கட்டளையை நீங்கள் கேட்கும்போது, பின் வாங்குகிறீர்களா? தட்டிக் கழிக்கிறீர்களா ? பொறுப்புகளை வேறோருவருக்கு மாற்றுகிறீர்களா ? அல்லது பிதாவை கணப்படுத்த நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இருதயத்தில் ஞானமுள்ளவன் தேவனுடைய கட்டளைகளை ஆசீர்வாதத்தை போல ஏற்றுக்கொண்டு பத்திரப்படுத்துகிறான். மூடனோ தனக்கேற்றப்படி கட்டளையை உபயோகிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். நாம் நேர்மையாக இருக்கிறோமா ?நம்மை நாமே , நிதானிப்போமாக! இந்த "இருவரில் நான் யார்?"
என்னுடைய ஜெபம்
விலையேறப்பெற்றவரும், கிருபையுமான தேவனே, என் பரலோகத்தின் பிதாவே, உம்முடைய சத்தியத்தையும், கட்டளைகளையும் எனக்குக் காண்பிக்கும் அளவுக்கு என்னை நேசித்ததற்காக உமக்கு நன்றி. தயவுகூர்ந்து என் கீழ்ப்படிதலைப் உபயோகித்து உம்முடைய குணாதிசயங்களை என்னுள் உருவாக்கி , என் வாழ்க்கையில் நீர் அனுமதித்தவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்படி என்னுடைய மாதிரியை மாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.