இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசு பரலோகத்தை விட்டு இறங்கி வந்து தன்னை ஊழியஞ்செய்பவராக தாழ்த்தினார்.பிந்தினவர் முந்தினவராகவும், வேலைக்காரன் எல்லாவற்றிலும் சிறந்தவனாகவும் , சிறியவர் மிக முக்கியமானவராகவும் இருக்க அவர் அவ்வாறு செய்தார். இயேசு பாவிகளுக்காகவும் பலவீனர்களுக்காகவும் மரித்தார். இருமாப்புமுள்ளவர்கள் , துரோகிகள் மற்றும் அதிகாரமுள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் அழைப்பை எளிதாக நிராகரித்துள்ளனர். எப்படி இருப்பினும், தாழ்மையுள்ளவர்கள் இயேசுவை இரட்சகராகவும், ஜெயவீரராகவும், ராஜாவாகவும், நண்பராகவும் காண்கிறார்கள். கர்த்தர் அப்படிப்பட்டவர்களில் மகிழ்ச்சியடைகிறார் மற்றும் அவர்களுடன் தனது இரட்சிப்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்.
என்னுடைய ஜெபம்
விலையேறப்பெற்ற ஊழியரே, சர்வவல்லமையுள்ள ராஜாவே , மிகுந்த விலையை கொடுத்து எங்களுக்கு ஊழியஞ் செய்ததற்கும், நாங்கள் உம்முடன் வாழ முடியும் என்பதைக் காட்டியதற்காகவும் நன்றி. என் தேவனாகிய உம் முன் நான் தலைவணங்கும்போது, முழங்கால்கள் யாவும் முடங்கும் நாளை நான் எதிர்நோக்குகிறேன். அந்த நாள் வரை, எங்கள் பரபரப்பான மற்றும் வசீகர -மயக்கத்தால் அடிக்கடி தங்களையே மறந்துவிட்டவர்களை ஆசீர்வதிக்க நீர் என்னைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் . என் ஆண்டவராகிய இயேசுவே, உம்மை அனுப்பியதற்காக எங்கள் தேவனுக்கு மகிமையும் கனமும் என்றென்றும் உண்டாவதாக. இயேசுவின் பரிசுத்த நாமத்தில் என் துதியைச் செலுத்துகிறேன். ஆமென்.