இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உணவும், பானமும் நம்மை தேவனிடம் கிட்டிச் சேர வைக்காது அல்லது தேவனிடமிருந்து நம்மைத் தூரப்படுத்தாது என்பதை இயேசுவும், பவுலும் வலியுறுத்துகின்றனர் - எது நம் இருதயத்திலிருந்து பிறக்கிறதோ அதுவே நம்மைச் பரிசுத்தப்படுத்துகிறது அல்லது அசுத்தமாக்குகிறது (மாற்கு 7:14-23; கொலோசெயர் 2:16). கிறிஸ்துவின் கிருபைக்குள்ளாய் நாம் எதை உண்கிறோம், என்ன குடிக்கிறோம் என்பதில் நமக்கு நம்பமுடியாத சுதந்திரம் இருக்கிறது என்பதே அவர்களின் போதனையின் அர்த்தம். இருப்பினும், பலவீனமான சகோதரனையோ அல்லது சகோதரியையோ கர்த்தரோடு நடப்பதை அழிக்கும் உரிமத்தை நம்முடைய சுதந்திரம் நமக்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை . நாம் உண்பதையும் குடிப்பதையும் பார்த்து பெலவீனர்களை பாவத்திற்கு வழி நடத்தி செல்லவோ அல்லது அவர்களை தடுமாற செய்யவோ நமக்கு உரிமை இல்லை. குறிப்பாக கிறிஸ்துவுக்குள் உள்ள நமது புதிய சகோதர சகோதரிகளை கருத்தில் கொண்டு நம்முடைய சுதந்திரத்தை ஞானமாய் பயன்படுத்துவோம். இந்தப் புதிய கிறிஸ்தவர்களுக்கு நமது ஊக்கம் தேவை; ஏனென்றால் அவர்களிடம் ஏற்கனவே அநேக தடுமாற்றங்கள் உள்ளன. நம் இருதயங்களில் அதிக கவனம் செலுத்துவோம் — எதைச் செய்ய அல்லது செய்யாமல் இருக்க நம்மைத் தூண்டுகிறது, எதைச் சொல்வது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே அது நம்மை பாவத்திற்கு வழி நடத்தி செல்லும் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்வோம் (ரோமர் 14:22-23).

என்னுடைய ஜெபம்

கிருபையின் ஊற்றான தேவனே , புதிய கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக அவர்களின் விசுவாசத்தில் பலவீனமானவர்களுக்கும் ஒரு ஊக்கமாகவும் நல்ல முன்மாதிரியாகவும் இருக்க எனக்கு உதவிச்செய்யும் . பரிசுத்த ஆவியானவரே, அடியேன் மற்றவர்களுக்கு ஒரு மோசமான முன்மாதிரியாக இருக்காமல் இருக்க என் வாழ்க்கையைப் பாதுகாக்க எனக்கு ஞானத்தை தந்து வழிநடத்தும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து