இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் நம் வாழ்க்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறோம் . நாம் தேவனுடைய புத்திரராய் வாழ்கிறோமா? அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலுமாய் ஒப்புவித்து வாழ்கிறோம் என்பதை காண்பிக்கிறோம்! பிதாவின் புத்திரர்களாகிய நாம் நம்முடைய உறவை நம் உலகில் அவருடைய குணாதிசயத்தோடே வாழ்வதன் மூலம் அதை நிரூபிக்கிறோம் . நாம் ஆவியின் கனிகளை நம்முடைய வாழ்க்கையில் காண்பிக்கும்போது (கலாத்தியர் 5:22-23) நம்முடைய மூத்த சகோதரனாகிய இயேசுவைப் போல மறுரூபமாகிறோம் (ரோமர் 8:14-17; எபிரேயர் 2:14-18) அப்படி மாறுவதற்கு (2 கொரிந்தியர் 3:18) பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார் என்று முழுநிச்சயமாய் விசுவாசிக்கிறோம் . எனவே, பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டின் கீழ் எப்பொழுதுமே வாழ்வோம் - பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்த ஆவியின் மூலமாய் ஏவப்பட்ட வார்த்தைக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிந்து, நம் அனுதின வாழ்வில் ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம். இந்த வழியில் செல்லும்போது , நாம் சொல்லாலும், கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் இயேசுவைக் காண்பித்து பகிர்ந்து கொள்ள ஏதுவாகும் !
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , என் வாழ்வில் இயேசுவின் அழகையும், கிருபையையும் , பரிசுத்தத்தையும் காண்பிக்க எனக்கு உதவிச் செய்யும் . ஒவ்வொரு நாளும் நான் கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல், வல்லமை மற்றும் பெலனை நான் வெளிப்படுத்த வழி செய்யும். இயேசுவின் நாமத்தினாலும் அவருடைய அதிகாரத்தின் மூலமாய் நான் ஜெபிக்கும்போது இந்த கிருபையை கேட்டு பெற்றுக்கொள்ளுகிறேன். ஆமென்.