இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இவ்வளவு பரந்த உலகங்களில் , நாம் வாழும் சிறிய கிரகம் எது ? பூமியானது பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் ஜீவராசிகள் நிறைந்த ஒரு உலகம், அதில் அனுதின எளிய மனுஷர்களின் நிலை என்ன? நமக்கு முன் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நம்முடைய முக்கியத்துவம் பெரியது என்பதை இயேசு நமக்கு நினைப்பூட்டுகிறார் - நாம் மிகவும் முக்கியமானவர்கள் என்பதால் அல்ல, மாறாக நாம் தேவனால் தனிப்பட்ட முறையில் அறியப்பட்டவர்கள் என்பதால். நாம் பயப்பட வேண்டியதில்லை; இருப்பவரும் இருந்தவரும் வரப்போகிறவருமாகிய அவரால் நாம் அறியப்படுகிறோம், நேசிக்கப்படுகிறோம்!
என்னுடைய ஜெபம்
நித்தியமுள்ள தேவனே , சர்வவல்லமையுள்ள பிதாவே , நல்ல மேய்ப்பரே, நீர் முன்னமே என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் . நான் பாவத்துடன் எங்கு போராடுகிறேன் என்பது உமக்கு நன்றாய் தெரியும்; தயவுகூர்ந்து என்னை மன்னித்தருளும் . என் அச்சங்களை நீ அறிந்திருக்கிறீர் ; தயவு செய்து என்னை உற்சாகப்படுத்தி பெலப்படுத்துங்கள். நான் இன்னும் குழந்தையைப் போல இருக்கிறேன் என்று நீர் அறிவீர் ; தயவாய் என்னை பூரணமடைய பக்குவப்படுத்துங்கள். என் பலவீனத்தையும் நோயையும் நீர் அறிந்திருக்கிறீர், தயவுகூர்ந்து என்னை ஆறுதல்படுத்தி குணப்படுத்தும் . பரிசுத்தமான தேவனே , நீர் என்னை அறிந்திருக்கிறீர், நேசிக்கிறீர் என்று நான் வியப்படைகிறேன், ஆறுதலடைகிறேன். உமக்கு கோடான கோடி நன்றி! இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.