இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மன்னிப்பு என்பது தேவனை கனப்படுத்தும் வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும் போது மிகவும் அற்புதமானது. இயேசு பாவத்திலிருந்து நம்மை மீட்டு அவருடைய மகிமையின் பிரச்சன்னத்திற்கு அழைக்க வந்தார் . நமது முந்தைய பாவங்களை நாம் புறக்கணித்து, நம்முடைய அவமானத்தையும் குற்றத்தையும் நீக்கிவிடும்போது, ​​அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார், மேலும் நாம் அற்புதமாக ஆசீர்வதிக்கப்படுகிறோம். நம்முடைய கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, அவர் நமக்காக முன்னமே , நாம் செய்யும்படி ஆயத்தம்பண்ணின அந்த பயனுள்ள ஊழியத்தின் வாழ்க்கைக்கு நம்மை அழைக்கவும் அவர் கிருபையை கொடுத்திருக்கிறார் (எபேசியர் 2:1-10). பயங்கரமான ஒன்றிலிருந்து நாம் மட்டும் மீட்கப்படவில்லை ;ஆனால் நாம் அற்புதமான ஒன்றுக்காக இரட்சிக்கப்பட்டுள்ளோம் !

என்னுடைய ஜெபம்

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது வழிகளிலெல்லாம் பரிசுத்தமும் கிருபையுமுள்ளவர். எனவே, அன்பான பிதாவே , தயவுசெய்து என் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றியருளும் , அதனால் நான் உமது ஆவிக்குரிய சித்தத்தில் எப்பொழுதும் வாழ முடியும். மன்னிப்புக்கான உறுதியையும், அவமானத்திலிருந்து நான் பெற்றுக்கொள்ளும் விடுதலையின் மேல் நம்பிக்கையையும், உம்முடனான என் எதிர்காலத்தில் உள்ள வாழ்க்கையை குறித்த தைரியத்தையும் தாரும் , அதனால் நான் என் பாவத்தை விட்டுவிட்டு, நீர் எனக்காக ஆயத்தம்பண்ணின பயனுள்ள ஊழியத்தின் வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள ஏதுவாகும் . உம்முடைய கிருபையினாலும் , அளவற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் என் இருதயத்தையும், என் வாழ்க்கையையும் நிலைவரப்படுத்தும் அப்பொழுது நான் இயேசுவின் தெளிவான பிரதிபலிப்பாக இருக்க முடியும் . இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து