இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா ! "பிரதான கட்டளை " மிகவும் நேரடியானது, இல்லையா? சில நேரங்களில் நாம் விஷயங்களை மிகவும் சிக்கலானதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் ஆக்குகிறோம், குறிப்பாக மத விஷயங்களில் அப்படி செய்கிறோம். நான் பரிசுத்த வேதாகமத்தை நேசிக்கிறேன், ஏனென்றால் தேவன் நம் நடத்தையை கையாளும் போது அது பெரும்பாலும் நடைமுறையானதும்,எளிமையானதுமாக இருக்கிறது . ஒருவரை எப்படி நடத்துவது என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால், எது உங்களுக்குச் செய்யப்பட்டால் ஆசீர்வாதமாய் இருக்குமோ அதையே அவர்களுக்கும் செய்யுங்கள்! எது உங்களை ஆசீர்வதிக்கவோ, ஊக்கப்படுத்தவோ, கட்டியெழுப்பவோ, ஆதரிக்கவோ, ஆறுதலளிக்கவோ அல்லது உங்களுக்கு உதவவோ இல்லையோ , அதை அவர்களுக்குச் செய்யாதிருங்கள் . ஒருவேளை அது உங்களை காயப்படுத்தினால், ஒடுக்கினால் , மனச்சோர்வடைந்தால், வெறுப்படையச் செய்தால் அல்லது மட்டுப்படுத்தினால் அந்தபடி மற்றவர்களையும் நடத்தாதீர்கள். உங்களுடன் நீங்கள் பயன்படுத்த விரும்பும் அதே கண்ணியம், இரக்கம், அன்பு, மரியாதை மற்றும் சாந்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். புரிந்துகொள்வது எளிது; ஆனால் நடைமுறையில் செய்யவது மிகவும் கடினமானது . இதுதான் இயேசுவானவர் வணைந்த வாழ்க்கை முறையாகும் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , சில விஷயங்களை மிகவும் எளிமையாகப் புரிந்துகொள்ள வைத்ததற்காக உமக்கு நன்றி. எனது உறவுகளில் "பிரதான கட்டளையை மேற்கொண்டு " வாழ முயற்சிக்கும்போது தயவுசெய்து உம்முடைய அன்பால் என் இருதயத்தை நிரப்பியருளும் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து