இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பரிசுத்த ஆவியானவர் இப்போது நமக்கு அதிகாரம் மாத்திரம் அளிப்பதில்லை (எபேசியர் 3:14-21) - நிச்சயமாக, அவர் நமக்கு ஞானத்தையும் பெலத்தையும், வல்லமையையும் மற்றும் வழிகாட்டுதலையும் கொடுக்கிறார் - ஆனால் அழிந்து போகும் இந்த மாம்ச சரீரத்துக்கு ஜீவன் உண்டாகும் அளவுக்கு பரிசுத்த ஆவியின் கிரியை இப்போது வல்லமையுள்ளதாய் இல்லை. ஆவியானவர் நமது வரும்காலத்திற்கு வாக்குத்தத்தமாய் இருக்கிறார் (2 கொரிந்தியர் 1:22; 5:5) மேலும் ஓர் நாள் நாம் தேவனை முகமுகமாய் காண்போம் (1 யோவான் 3:1-2) அப்பொழுது அவருடைய மகிமையில் பங்கடைவோம் என்ற வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோசெயர் 3: 1 -4). ஆவியானவர் நம்மில் ஜீவன் உள்ளவராய் இருக்கிறார், "அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம், (ரோமர்8:23) " மேலும் பரிசுத்த ஆவியை பெற்றதின் காரணமாக பிதாவின் சமூகத்திலே , குமாரனுடனும் ஒருபோதும் நித்தியமான வாழ்க்கையை நமக்கு உறுதியளிக்கிறார்.
என்னுடைய ஜெபம்
எல்லா தேசங்களுக்கும் மற்றும் இனத்தாருக்குமாகிய பிதாவாகிய தேவனே , நீர் அடியேனை மரித்தோரிலிருந்து எழுப்பி, அந்த நேரமே எனக்கு அதிகாரம் கொடுத்தீர் என்பதற்கு எனது உத்தரவாதமாக இருக்கும் உமது பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. அந்த மகத்தான நாளை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, நான் இயேசுவோடு என்றென்றும் உம் சமூகத்தில் சேர்வேன் என்பதை அறிவேன். எனவே, அன்பான பிதாவே, நான் இயேசுவின் நாமத்தில் உம்மை துதிக்கிறேன், பரிசுத்த ஆவியின் வல்லமையால், நான் அந்த மகத்தான நாளை எதிர்பார்த்து இன்று உமக்காக வாழ்கிறேன். ஆமென்.